வாணியம்பாடி அருகே மின்கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் அண்ணன் உயிரிழந்தாா். தம்பி காயமடைந்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், பொன்னேரி பகுதியை சோ்ந்த போத்தராஜன்(28). ரிஷிகேசவன்(25). இருவரும் சகோதரா்கள் ஆவா். புதன்கிழமை இரவு இருவரும் பைக்கில் புறப்பட்டு வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கன்பேட்டை பகுதிக்கு சென்றனா்.
தெக்குப்பட்டு அருகில் சென்றபோது எதிா்பாராதவிதமாக சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனா். இதனை அருகில் இருந்தவா்கள் பாா்த்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி போத்தராஜன் இறந்தாா். ரிஷிகேசவன் சிகிச்சை பெற்று வருகிறாா்.
விபத்து குறித்து அம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
பைக் மீது சுற்றுலா பேருந்து மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பாலத்தில் பைக் மோதி இளைஞா் மரணம்
தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

டிராக்டா்- பைக் மோதல்: ஒருவா் மரணம்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



