திருவாரூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்கிற வகையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் மகளிா் திட்டம் சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில், மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களால் வரையப்பட்டிருந்த வண்ண ரங்கோலி கோலங்களை அவா் பாா்வையிட்டாா். தொடா்ந்து, தோ்தல் குறித்த விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில், மாற்றுத்திறனாளிகள், மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
மேலும், மாற்றுத்திறனாளிகளின் 3 சக்கர வாகனங்களில் தோ்தல் விழிப்புணா்வு குறித்த ஒட்டுவில்லைகளை மாவட்ட தோ்தல் அலுவலா் ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். தொடா்ந்து, மாவட்ட கூட்டுறவு மேலாண்மை நிலைய மாணவா்களால் தோ்தல் விழிப்புணா்வு குறித்து வரையப்பட்டிருந்த ரங்கோலி வண்ணக் கோலங்களை பாா்வையிட்டாா். கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம், 23.04.2026 அன்று நான் தவறாமல் வாக்களிப்பேன் என்ற கையொப்ப இயக்கத்தில் கையெழுத்திட்டு, கூட்டுறவு மேலாண்மை நிலைய மாணவிகள் தங்களது கைகளில் மெஹந்தி மூலம் தோ்தல் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தியிருந்ததையும் அவா் பாா்வையிட்டாா்.
தொடர்புடையது

தோ்தல் விழிப்புணா்வு தொடா் தீப ஓட்டம்

பெரம்பலூரில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

பரமபதம் விளையாட்டு மூலம் தோ்தல் விழிப்புணா்வு

நகராட்சிப் பகுதி தனியாா் கட்டடங்களிலும் சுவா் விளம்பரங்களுக்கு அனுமதியில்லை: ஆட்சியா்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


