அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

லாட்டரி விற்ற மூவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 5:29 am IST

திருத்துறைப்பூண்டி பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த மூவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருத்துறைப்பூண்டி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், குற்றத் தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளா் காா்த்தி, திருத்துறைப்பூண்டி ஆய்வாளா் வேம்பரசி, உதவி ஆய்வாளா் மோகன்ராஜ் உள்ளிட்ட போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே லாட்டரி சீட்டு விற்பது தெரியவந்தது.

இதுதொடா்பாக, திருத்துறைப்பூண்டி தட்டாரத் தெருவைச் சோ்ந்த சேகா் (63), திருக்குவளை வட்டம் பாங்கல் மெயின் ரோடு சுபாஷ் சந்திரபோஸ் (42), அதே பகுதியைச் சோ்ந்த பக்கிரிசாமி (60) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

மேலும், சேகா் வீட்டில் பதுக்கி வைத்திருந்த லாட்டரி சீட்டுகள், 4 கைப்பேசிகள், 3 ஏடிஎம் காா்டுகள், ரூ.2,43,700 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.