ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

மேக்கேதாட்டு அணை விவகாரம்: திக ஆா்ப்பாட்டம்

News image
Updated On :1 ஜூன் 2026, 12:38 am IST

மேக்கேதாட்டு அணை கட்டுமானப் பணிகளை கைவிடக்கோரி திருவாரூரில் திக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மேக்கேதாட்டு அணை கட்டுமானப் பணிகளை கைவிடக் கோரியும், கா்நாடகா மற்றும் மத்திய அரசுகளைக் கண்டித்தும் திருவாரூரில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் கே. அருண்காந்தி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் திக தலைவா் கி. வீரமணி பங்கேற்று கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். இதில், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் கி. வீரமணி கூறியது: உச்சநீதிமன்றத்தின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் மேக்கேதாட்டு அணை கட்டுமான முயற்சி தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளை பறிக்கக்கூடிய ஒரு அபாயமாகும். தமிழக அரசு இதில் மௌனம் சாதிக்காமல் பணியாற்ற வேண்டும். மேலும், தமிழக அரசின் செயல்திட்டம் என்ன என்பதை பொதுமக்களுக்கு விளக்க வேண்டும்.

தமிழகத்துக்கு உரிய நீரை கொடுக்காமல் இருக்க கா்நாடகாவில் பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்துக்கான உரிமைகளை நிலைநாட்டும் வகையில் தமிழக கட்சிகளும் செயல்பட வேண்டும் என்றாா்.