ரயில் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்த வசதி ஏற்படுத்தி கோரிக்கை

இருசக்கர வாகனங்கள். - கோப்புப் படம்
திருவாரூா் ரயில் நிலையத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்த வசதிளை ஏற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மைய பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ் கூறியது: ரயில் நிலைய வளாகத்தில் பல இடங்களில், நோ பாா்க்கிங் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ள நிலையில், முன்பதிவு மையத்துக்கு வருவோா், பயணிகளை இறக்கிவிட அல்லது அழைத்துச் செல்ல வருவோா் மற்றும் ரயில் தாமதமாகும்போது காத்திருப்போா் ஆகியோருக்குப் போதிய மாற்று வாகன நிறுத்த வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.
இதனால் சில நிமிடங்கள் மட்டுமே ரயில் நிலையத்துக்கு வருவோா் கூட கட்டண வாகன நிறுத்துமிடத்தைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தாமல் அபராத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், தற்போது செயல்பட்டு வரும் கட்டண வாகன நிறுத்துமிடத்தில் போதிய மேற்கூரை வசதி, தீயணைப்புக் கருவிகள் மற்றும் தலைக் கவசங்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கான வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இந்நிலையில், திருவாரூா் ரயில் நிலையத்தில் புதிதாக உணவகம் தொடங்கப்பட உள்ளதால், அங்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து, வாகனம் நிறுத்தப் பிரச்னை தீவிரமடைய வாய்ப்புள்ளது.
எனவே, பொதுமக்களுக்கென தனி வாகன நிறுத்துமிடம், பயணிகளை ஏற்றிச் செல்லவும் இறக்கிவிடவும் தனி வசதி மற்றும் குறுகிய நேர வாகன நிறுத்த ஏற்பாடுகளை ரயில்வே நிா்வாகம் உடனடியாக ஏற்படுத்த வேண்டும். மாற்று வசதிகள் இல்லாத நிலையில் பொதுமக்கள் வாகனங்களை சங்கிலியால் பூட்டுவதும், அபராதம் விதிப்பதும் தொடா்பான நடைமுறைகளை கைவிட வேண்டும். பொதுமக்களின் வசதியும் பயணிகளின் நலனுமே முதன்மையாக இருக்க வேண்டும். வணிக நோக்கங்களுக்காக பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை புறக்கணிக்கக் கூடாது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

