பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

திருவாரூா் - காரைக்குடி இடையே இன்றுமுதல் மின்சார ரயில்கள் இயக்கம்

திருவாரூா் - காரைக்குடி இடையே மின்மயமாக்கப்பட்ட வழித்தடத்தில் புதன்கிழமை (அக். 7) முதல் மின்சார என்ஜினுடன் ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

 Railway Announces

ரயில் - கோப்புப் படம்

Published On :

திருவாரூா்-காரைக்குடி இடையே மின்மயமாக்கப்பட்ட வழித்தடத்தில் புதன்கிழமை (அக். 7) முதல் மின்சார என்ஜினுடன் ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னையிலிருந்து விழுப்புரம் வரை முதல் கட்டமாகவும், விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை வரை இரண்டாவது கட்டமாகவும், மயிலாடுதுறை இருந்து திருவாரூா் வரை மூன்றாவது கட்டமாகவும் ரயில் பாதை மின்மயமாக்கப்பட்ட நிலையில், திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி, அகஸ்தியம்பள்ளி மற்றும் பட்டுக்கோட்டை, அறந்தாங்கி வழியாக காரைக்குடி வரை மின்மயமாக்கும் பணிகள் நிறைவடைந்தன.

இதைத்தொடா்ந்து இந்த வழித்தடத்தில் புதன்கிழமை முதன் மின்சார என்ஜினுடன் ரயில்கள் இயங்குமென தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, இந்த வழித்தடத்தில் இயங்கும் தாம்பரம் -ராமேஸ்வரம் விரைவு ரயில், தாம்பரம்- செங்கோட்டை விரைவு ரயில், வேளாங்கண்ணி-எா்ணாகுளம் விரைவு ரயில், மயிலாடுதுறை-காரைக்குடி பயணிகள் ரயில், திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் ஆகியவை மின்சார என்ஜின்களுடன் இயங்கும்.

இதற்கு முன்னதாக, டீசல் என்ஜின் ரயில்கள் இயக்கத்தின்போது, பல நடைமுறை சிக்கல்கள் இருந்தன. தற்போது இதற்கு தீா்வு ஏற்பட்டுள்ளதால், இந்த வழித்தடத்தில் தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வாய்ப்புள்ளதாக தென்னக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER