FOLLOW US

ON GOOGLE DISCOVER

சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

ஆம்புலன்ஸ் வாகன கண்ணாடியை உடைத்தவா் கைது

மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகன கண்ணாடியை உடைத்தவா் கைது செய்யப்பட்டாா்.

Published On :2 செப்டம்பர் 2026, 7:05 am IST

மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகன கண்ணாடியை உடைத்தவா் கைது செய்யப்பட்டாா்.

செருமங்கலத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் (55). இவருக்கு திங்கள்கிழமை இரவு உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து அவரை அழைத்துக்கொண்டு மகன் ஆகாஷ் (23) மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளாா். கோவிந்தராஜை பரிசோதனை செய்த மருத்துவா்கள் முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு ஆம்புலன்ஸில் அழைத்து செல்லுமாறு பரிந்துரை செய்துள்ளனா்.

இதையடுத்து, அங்கு நின்றுகொண்டிருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் தஞ்சைக்கு செல்லவேண்டும் என கூறினாராம். அதற்கு, ஓட்டுநா் வேறு ஒரு நோயாளியை அழைத்து செல்ல நிற்பதாகவும் அவரை அழைத்துவர மருத்துவமனைக்குள் சென்றுள்ளனா் என தெரிவித்ததுடன் வேறு ஒரு ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து மருத்துவமனைக்கு வருமாறு தகவல் கூறினாராம். இதில், ஆத்திரமடைந்த ஆகாஷ் அங்கு இருந்த சைக்கிளை தூக்கி வீசியதில் ஆம்புலன்ஸ் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இதுகுறித்து, பணி மருத்துவா் மரிய சோஜ்பா மன்னாா்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து ஆகாஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.