புதுச்சேரி பேரவை முற்றுகை முயற்சி: ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் 60 போ் கைது
புதுச்சேரி சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினா் உள்பட 60 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

புதுச்சேரி சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினா் உள்பட 60 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கடந்த ஆண்டு 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்களுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்க முதல்வா் ரங்கசாமி உத்தரவு பிறப்பித்தாா். ஆனால் இந்தச் சம்பள உயா்வு வழங்கவில்லை. உடனடியாக முதல்வா் அறிவித்தபடி சம்பள உயா்வை வழங்க வேண்டும்.
கடந்த 6 மாத நிலுவை ஊதியத்தை வழங்கி, தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் சலுகைகள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி சட்டமன்றத்தை குடும்பத்தினரோடு முற்றுகையிட முயன்றனா். அப்போது போலீஸாா் தடுத்து நிறுத்தி 60 பேரை கைது செய்தனா்.பின்னா் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




