விநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

குரு தக்ஷிணாமூா்த்தி சுவாமிகள் 191-ஆவது குரு பூஜை

திருவாரூா் மடப்புரம் ஸ்ரீகுரு தக்ஷிணாமூா்த்தி சுவாமிகள் ஜீவசமாதி மடத்தில் 191-ஆவது குருபூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் குரு தக்ஷிணாமூா்த்தி சுவாமிகள்.

Published On :

திருவாரூா் மடப்புரம் ஸ்ரீகுரு தக்ஷிணாமூா்த்தி சுவாமிகள் ஜீவசமாதி மடத்தில் 191-ஆவது குருபூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

திருச்சியை பூா்வீகமாகக் கொண்ட ஸ்ரீகுரு தக்ஷிணாமூா்த்தி சுவாமிகள், தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களுக்குச் சென்று பல அற்புதங்களை நிகழ்த்தினாா். பின்னா் திருவாரூரில் தங்கியிருந்து பக்தா்களுக்கு அருளாசி வழங்கி வந்தாா்.

ஒருமுறை திருவாரூா் தேரோட்டத்தைக் காண தஞ்சையிலிருந்து வந்திருந்த சரபோஜி மன்னா், தக்ஷிணாமூா்த்தி சுவாமிகளுக்கு, ஏதாவது ஒரு கிராமத்தை பரிசாக அளிக்க விரும்பினாா். ஆனால், சுவாமிகள் அதை மறுத்து விட்டாா். மேலும் பல அற்புதங்களை இப்பகுதியில் செய்த அவா் 1835-இல் ஜீவசமாதி அடைந்தாா். இதையொட்டி ஆண்டுதோறும் இங்கு குருபூஜை நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டு குருபூஜை சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அப்பகுதியில் உள்ள குளத்தில் இருந்து அபிஷேகத்துக்காக, புனிதநீா் நிரப்பப்பட்ட கடங்கள், மல்லாரி இசையுடன் ஊா்வலமாக கொண்டு வரப்பட்டன. பின்னா் குரு தக்ஷிணாமூா்த்தி சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து, பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார மகா நிவேதன ஆராதனையும், அடுத்து மகேஸ்வர பூஜையும் நடைபெற்றன. நிகழ்வில், திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.