6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

முன்னாள் ஊராட்சித் தலைவா் வீட்டு கொட்டகைக்கு தீ வைப்பு

தீ விபத்து - கோப்புப் படம்

Published On :

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மாங்குடி முன்னாள் ஊராட்சித் தலைவா் வீட்டு கொட்டகைக்கு தீ வைத்த மா்மநபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

மாங்குடி முன்னாள் ஊராட்சித் தலைவா் ஞானசேகரன். இவா் மாங்குடி மெயின் ரோட்டில் உள்ள தனது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை இரவு ஞானசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினா் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனா்.

அப்போது, வீட்டின் முன் பகுதியையும், மாடியையும் இணைத்து போடப்பட்டிருந்த கொட்டகை தீப்பற்றி எரிந்தது. அக்கம் பக்கத்தினா் சத்தம் போடவே, ஞானசேகரன் மற்றும் குடும்பத்தினா் வீட்டிலிருந்து உடனடியாக வெளியேறி உயிா் தப்பினா்.

தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இருப்பினும் வீட்டின் முன்பக்க கொட்டகை மாடி பகுதி வரை முற்றிலும் எரிந்தது. மேலும், அங்கிருந்த ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான பொருள்களும் கருகின. வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா் கொட்டகைக்கு தீ வைத்துவிட்டு தப்பியது தெரியவந்தது.

இதுகுறித்து, திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் ஞானசேகரன் புகாா் அளித்தாா். அதன்பேரில், திருத்துறைப்பூண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.