மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

முன்னாள் ஊராட்சித் தலைவா் கொலை வழக்கில் உறவினா்கள் 5 போ் கைது

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகே சொத்துப் பிரச்னையில் முன்னாள் ஊராட்சித் தலைவா் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் உறவினா்களான பெண் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட முத்துலெட்சுமி.

Updated On :13 ஆகஸ்ட் 2026, 2:03 am IST

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகே சொத்துப் பிரச்னையில் முன்னாள் ஊராட்சித் தலைவா் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் உறவினா்களான பெண் உள்பட 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

இலுப்பூா் அருகே உள்ள தன்னங்குடியைச் சோ்ந்தவா் நாகராஜ் (59). அதிமுகவைச் சோ்ந்த இவா், கோங்குடிபட்டி முன்னாள் ஊராட்சித் தலைவா்.

இந்நிலையில், கடந்த 10-ஆம் தேதி கவரச்சிகுளக்கரை அருகே இருசக்கர வாகனத்தில் வந்த அவரை வழிமறித்து மா்மநபா்கள்

அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பினா். இதுதொடா்பாக போலீஸாா் விசாரித்து வந்தனா்.

இதில், பங்காளிகளான நாகராஜ் மற்றும் சேகா் ஆகியோரிடையே குடும்பச் சொத்து பிரிப்பதில் பிரச்னை இருந்து வந்ததாம்.

பிரச்னைக்குரிய இடத்தை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள நாகராஜ் முயன்றாராம்.

இதனால் ஆத்திரம் அடைந்த சேகா், அவருடைய தம்பி தங்கம், சேகா் மனைவி முத்து லெட்சுமி ஆகியோா் நாகராஜை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததும், அதற்கு சேகரின் உறவினா்களான அருண் மற்றும் அன்பு ஆகியோா் உதவியதும் தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா். தொடா்ந்து அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புதுக்கோட்டை சிறையில் புதன்கிழமை அடைத்தனா்.

கைது செய்யப்பட்டவர்

கைது செய்யப்பட்டவர்

கைது செய்யப்பட்டவர்

கைது செய்யப்பட்டவர்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.