அணை வலுவாக இருப்பதை நிரூபிக்கும் விடியோ
புது தில்லி, டிச. 11: முல்லைப் பெரியாறு அணையினால் ஏற்படும் பாதிப்பை சித்திரிக்கும் நூற்றுக்கணக்கான விடியோக்கள் உலா வரும் இணையதளத்தில் அணை பலமாக உள்ளது என்ற தமிழகத்தின் நிலையை விளக்கிக் கூறும் குறும்ப


புது தில்லி, டிச. 11: முல்லைப் பெரியாறு அணையினால் ஏற்படும் பாதிப்பை சித்திரிக்கும் நூற்றுக்கணக்கான விடியோக்கள் உலா வரும் இணையதளத்தில் அணை பலமாக உள்ளது என்ற தமிழகத்தின் நிலையை விளக்கிக் கூறும் குறும்படம் மக்களின் ஆதரவைப் பெற்று வருகிறது.
உண்மைக்குப் புறம்பான பிரசாரம்: "முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது, உடையப்போகிறது, 35 லட்சம் பேர் உயிருக்கு ஆபத்து' என்பது தான் இணையதளத்தில் உள்ள விடியோ படங்கள் உணர்த்தும் விஷயம்.
இணையதளங்களில் பிரதான விடியோ பதிவான "யூ டியூப்'-ல் முல்லைப் பெரியாறு என டைப் செய்தால் அணை உடையப்போகிறது என்ற திரைப்படம் தான் முதலில் வருகிறது.
அணையில் விரிசல் ஏற்பட்டு நீர் ஊருக்குள் புகுந்து வீடுகள் மூழ்கும் காட்சி கிராபிக்ஸ் மூலம் தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளது. இந்த வகையான விடியோக்கள் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இது போன்ற சுமார் 150 விடியோக்கள் உள்ளன.
அதுமட்டும் இன்றி இதுபோன்ற காட்சிகள் கேரள தொலைக்காட்சிகளிலும் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.
உண்மையை விளக்கும் விடியோ: தமிழகத்தின் உண்மை நிலையை உணர்த்தும் தமிழ்நாடு பொதுப் பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கத்தால் தயாரிக்கப்பட்ட "முல்லைப் பெரியாறு; பிரச்னையும், தீர்வும்' என்ற குறும்படம் இணையதளத்தில் வெளியாகி மக்களின் பேராதரவைப் பெற்று வருகிறது.
சுமார் 40 நிமிடங்களுக்கு ஓடும் இந்தப் படத்தில் தற்போது முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள பகுதி 12-ம் நூற்றாண்டு வரை பாண்டிய மன்னர் கட்டுப்பாட்டில் இருந்தது என்று கூறப்பட்டுள்ளது.
1956-ம் ஆண்டு மொழிவாரியாக எல்லைகள் பிரிக்கப்பட்ட போது தமிழர்கள் வாழ்ந்த பகுதி கேரள மாநிலத்தில் சேர்க்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1976-ம் ஆண்டு கட்டப்பட்ட இடுக்கி அணைக்கு போதிய தண்ணீர் கிடைக்காததால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என்று 1979-ம் ஆண்டு முதல் கேரள அரசால் கூறப்பட்டு வருகிறது.
அதன்பின்னர் முல்லைப் பெரியாறு அணையைச் சுற்றி சுமார் ரூ. 18 கோடி செலவில் கேபில் ஆங்கரிங், கான்கிரீட் போன்ற நவீன தொழில்நுட்பத்தில் பலப்படுத்தப்பட்டது தெளிவாகக் காட்டப்படுகிறது.
கேரள அரசு புதிய அணையை எதற்காகக் கட்ட முற்படுகிறது என்றும் இந்தக் குறும்படத்தில் விளக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் கட்டப்படும் புதிய அணையின் மூலம் கேரள அரசு தண்ணீர் தர நினைத்தாலும் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காது என்று அதில் விஞ்ஞானரீதியாகத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 23-ம் தேதி வெளியிடப்பட்ட இந்தக் குறும்படம் குறித்து 26 ஆயிரம் பேர் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர். 359 பேர் விரும்பியும், 111 பேர் விரும்பவில்லை என்றும் பதிவு செய்துள்ளனர்.
அணை பாதுகாப்பு சட்டம்: இந்தக் குறும்படம் ஹாலிவுட் இயக்குநராலோ அல்லது கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கப்பட்டோ படமாக்கப்படவில்லை.
அணையைப் பலப்படுத்த மத்திய நீர் ஆணையம் தெரிவித்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்திய தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் முன்னாள் தலைமை பொறியாளர் ஆர்.வி.எஸ். விஜயகுமார், முன்னாள் சிறப்புத் தலைமை பொறியாளர் அ. வீரப்பன் உதவியுடன் மூத்த பொறியியல் ஆலோசகர் எஸ். ஜெயராமன் தயாரித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...