புது தில்லி, அக். 8: ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் அருகே அமைந்துள்ள காமாட்சி மந்திரில் ஐந்தாவது ஹரிநாம சங்கீர்த்தன ஆராதனை விழா சனிக்கிழமை தொடங்கியது.
மங்கள இசையுடன் குரு கீர்த்தனம், அஷ்டபதி ஆகியவற்றுடன் தொடங்கிய இந்த ஆராதனை விழாவில் மாலையில் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணமும் தொடர்ந்து ஐயப்பன் பஜனையும் நடைபெற்றன. இரவு 9 மணி முதல் மறுநாள் ஞாயிறு காலை 5 மணி வரையில் சம்பிரதாய பஜனை, திவ்வியநாமம், தீப பிரதக்ஷணம், டோலோத்ஸவம் ஆகியவை இடம்பெறுகின்றன.
ஞாயிறு காலை 9 மணி முதல் பத்மாவதி தாயார் - ஸ்ரீநிவாசர் திருக்கல்யாண உத்ஸவம், ஆஞ்சநேயர் உத்ஸவம், பகல் 1.30 மணிக்கு தீபாராதனையும் சமாராதனையும் நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







