தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கூடங்குளம் மக்களிடம் ஜெயலலிதா பேசவேண்டும்

புது தில்லி, செப். 18: கூடங்குளம் அணுமின் நிலையம் கூடாது என்று போராடும் மக்களிடம் முதல்வர் ஜெயலலிதா பேச முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர் மேதா பட்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களை 

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:29 am

அ. சர்ஃப்ராஸ்

புது தில்லி, செப். 18: கூடங்குளம் அணுமின் நிலையம் கூடாது என்று போராடும் மக்களிடம் முதல்வர் ஜெயலலிதா பேச முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர் மேதா பட்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களை  திங்கள்கிழமை (செப்.19) சந்திக்கிறார் மேதா பட்கர்.

"தினமணி' செய்தியாளருக்கு மேதா பட்கர் அளித்த பேட்டி விவரம்:

ஜப்பான், பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகள் புதிய அணுமின் நிலையங்களைத் தொடங்குவதை நிறுத்தியுள்ளனர். இதற்கு அந்த நாடுகள் அணுமின் நிலையங்களினால் சந்தித்த பேரழிவுகள்தான் காரணம்.

இது போன்ற பேரழிவுகளின் மூலம் இந்திய அரசு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இது ú பான்ற திட்டங்கள் தொடங்குவதற்கு முன்பு அப்பகுதி மக்களிடம் பேச்சு நடத்த வேண்டும். போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் கைது செய்யப்படுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. அணு சக்தியினால் உலகமே பெரும் ஆபத்தைச் சந்திக்க உள்ளது. இதை மத்திய அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த மக்களைச் சந்திக்க திங்கள்கிழமை திருநெல்வேலி செல்கிறேன். அவர்களுக்கு ஆதரவாக நானும் போராட்டத்தில் ஈடுபட உள்ளேன். நீண்ட நாள்களாகப்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அப்பகுதி மக்களை அழைத்து ஜெயலலிதா பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.

இந்த திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளைப் பெற மத்திய அரசிடம் பேச்சு நடத்த

ஜெயலலிதா முன்வர வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார் மேதா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.