தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மக்கள் பாதுகாப்புக்கு 6,608 புதிய காவலர்கள்

புது தில்லி, செப். 21:  பாதுகாப்பு குறித்த அச்சம் மக்கள் மத்தியில் பெருகிவரும் நிலையில், போதுமான போலீஸôர் இல்லாமல் இந்தியாவின் பல பெருநகரங்கள் கூடத் திணறி வருகின்றன. பணியில் உள்ள போலீஸôரும் அமைச்சர்கள

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:32 am

அ. சர்ஃப்ராஸ்

புது தில்லி, செப். 21:  பாதுகாப்பு குறித்த அச்சம் மக்கள் மத்தியில் பெருகிவரும் நிலையில், போதுமான போலீஸôர் இல்லாமல் இந்தியாவின் பல பெருநகரங்கள் கூடத் திணறி வருகின்றன.

பணியில் உள்ள போலீஸôரும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான பந்தோபஸ்துக்கு பல நேரங்களில் சென்று விடுவதால், மக்கள் பாதுகாப்புப் பணியில் போலீஸôர் உரிய கவனம் செலுத்த முடிவதில்லை என்ற குறை நாட்டின் பல மாநிலங்களில் இருந்து வருகிறது.

இந்நிலையில், தில்லி காவல் துறையில் புதன்கிழமையன்று 460 பெண்கள் உள்பட  6,608 காவலர்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது தில்லிவாசிகளுக்கு சிறப்புச் செய்தி.

கான்ஸ்டபிள் பயிற்சியை முடித்து அந்தக் காவலர்கள் பணியில் சேரும் விழா, தில்லி ஜரோடா போலீஸ் பயிற்சி கல்லூரியில் புதன்கிழமை காலை நடைபெற்றது.

தில்லி வரலாற்றில் 6,608 போலீஸ் ஒரே நாளில் பணியில் சேர்க்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த அணியில் 2,442 பேர் பட்டதாரிகள், 141 பேர் முதுநிலை பட்டதாரிகள் மற்றும் 6 பேர் சட்டப் படிப்பிலும், 144 பொறியியல் படிப்பிலும் பட்டம் பெற்றவர்கள்.

இதன் மூலம் தில்லி போலீஸ் படையின் எண்ணிக்கை 83,762 உயர்ந்து, உலகில் அதிக காவலர்கள் கொண்ட நகரங்களின் போலீஸ் பட்டியலில் தில்லி முதலிடம் வகிக்கிறது.

இந்தப் புதிய காவலர் அணியில், பெண்கள் உள்பட அனைவருக்கும் ஒரு மாதம் கமாண்டோ பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 25 பெண் காவலர்கள் சிறப்பு கமாண்டோ பயிற்சி பெறத் தகுதி பெற்றுள்ளனர்.

ஆயதம் இல்லாமல் மக்கள் பாதுகாப்பு பணி செய்யவும் பெண் காவலர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

குற்ற விசாரணைக்குத் தேவைப்படும் தடயவியல் பயிற்சி, சைபர் கிரைம் கணிணி வழிக் குற்றங்களைத் தடுப்பது, பொருளாதாரக் குற்றங்களைத் தடுப்பது உள்ளிட்ட பல பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஹரியாணாவைச் சேர்ந்த 2,313 பேரும், ராஜஸ்தானில் இருந்து 2,084 பேரும், உத்தரப் பிரதேசத்தில் இருந்து 1,490 பேரும், தில்லியில் இருந்து 668 பேரும், பிகாரில் இருந்து 24 பேரும், பஞ்சாபில் இருந்து 10 பேரும், உத்தரகண்டில் இருந்து 11 பேரும், ஹிமாச்சலப் பிரதேசத்தில் இருந்து 4 பேரும், மேற்கு வங்கம், ஜார்கண்ட, குஜராத், மஹராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் இருந்து தலா ஒருவரும் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இதில், 660 காவலர்களுக்கு மஹாராஷ்டிர மாநிலம் நன்டீட் என்ற பகுதியில் உள்ள சி.ஆர்.பி.எஃப். முகாமில் சிறப்பு கமாண்டோ பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

அதன் பின்னர் மத்தியப் பிரதேசத்தில் எல்லைப் பாதுகாப்பு படை முகாமில் அடுத்தகட்ட பயிற்சி பெற உள்ளனர்.

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், தில்லி காவல் துறை ஆணையர் பி.கே. குப்தா உள்பட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தில்லி துணை நிலை ஆளுநர் தேஜேந்தர் கன்னா,  காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.

தீவிரவாத சக்திகளை ஒடுக்கும் வகையில் காவலர்கள் தங்கள் திறமைகளை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்று அப்போது அவர் அறிவுறுத்தினார்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களையும், அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களையும் கண்காணிக்கும் பெண் போலீஸ் படையினருக்கு பணியில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார் அவர்.

"அதே சமயத்தில், மக்களிடம் மென்மையான அணுகுமுறையைப் போலீஸôர் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் எவ்வித தயக்கமும், அச்சமுமின்றி போலீஸôரிடம் பொதுமக்கள் தகவல் கொடுக்க முன்வருவார்கள்' என்றும் தேஜந்தர் கன்னா வலியுறுத்தினார்.

இந்த பயிற்சியின் அனைத்துச் சுற்றிலும் சிறப்பாகச் செயல்பட்ட யோகேஷ் குமாருக்கு கோப்பையை வழங்கி தேஜந்தர் கன்னா பாராட்டினார்.

பல்வேறு பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட ரோக்கி, அசோக் குமார், ஜக்பிர் சிங், விஜேந்தர் குமார் ஆகியோரும் கொளரவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.