சாதனைகள் புரிந்த கொல்கத்தா தமிழ் மன்றம்

கொல்கத்தா தமிழ் மன்றம் 1953}ஆம் ஆண்டு, ஏப்ரல் தமிழ் புத்தாண்டு, சித்திரை மாதம் அமரர் தியாகராஜனை தலைவராகக் கொண்டு தொடங்கப்பட்டது. சாண்டில்யன், சோமலெ. ஆகியோர் 1953-54,1954-55 ஆண்டுகளில் வருகை தந்து சிறப

கொல்கத்தா தமிழ் மன்றம் 1953}ஆம் ஆண்டு, ஏப்ரல் தமிழ் புத்தாண்டு, சித்திரை மாதம் அமரர் தியாகராஜனை தலைவராகக் கொண்டு தொடங்கப்பட்டது. சாண்டில்யன், சோமலெ. ஆகியோர் 1953-54,1954-55 ஆண்டுகளில் வருகை தந்து சிறப்பித்தார்கள். 1955 முதல் தமிழ் மன்றம் ஓர் இயக்கமாக வளரத் தொடங்கியது.  

மகாகவி பாரதியாரின் நினைவாக கல்கத்தாவில் உள்ள ஒரு சாலைக்கு "கவி பாரதிசரணி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கான முயற்சிகளை கல்கத்தா தமிழ் மன்றம் மேற்கொண்டது. திரு.வி.க., தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, ம.பொ.சி., ப. ஜீவானந்தம், புதுமைப்பித்தன், டாக்டர் மு.வ. உள்ளிட்ட தமிழ் அறிஞர்களின் திருவுருவப் படத் திறப்புகளை நடத்தியது கொல்கத்தா தமிழ்மன்றம். தமிழ்மன்றத்தின் வெள்ளி விழாவின்போது தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தில் இடம்பெற்ற பிரபலமான எழுத்தாளர்கள், கவிஞர்கள் 80 பேரை அழைத்துச் சிறப்பு செய்தது. எழுத்தாளர்கள் வந்தபோது பனிக்காலம். அனைவரும் தங்க வசதி, உணவு வசதிகளை செய்து வரலாற்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியானது. எழுத்தாளர்கள், கவிஞர்களை மாபெரும் கப்பலில் ஏற்றி, ஹெளரா நதியில் பயணித்தபடியே "கப்பல் கவியரங்கம்' நடத்திய சம்பவத்தை பலரும் வியந்து பாராட்டினார்கள். பொன்விழாவின் போது 50 அனைத்திந்திய தமிழ் அமைப்புகளின் தலைவர்,செயலாளர்களை அழைத்து கௌரவித்தது. தாகூரின் 150}ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவின்போது தாகூர் பாடல்களை தமிழ் மொழியில் மொழி பெயர்த்து ஒலிப்பேழை வெளியிட்டு சிறப்பித்தது. பாரதி - 126 என்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்து பாரதி பாஷா பரிஷத் அமைப்புடன் இணைந்து, ""கவிபாரதியின் பாஞ்சாலி சபதம்'' இந்தி மொழி பெயர்ப்பு நாட்டிய நாடகம் நிகழ்த்தியது தமிழ் மன்றம். கண்ணதாசனை கொல்கத்தாவிற்கு அழைத்தது மட்டுமன்றி அவரை சாந்திநிகேதனில் உள்ள விசுவபாரதி பல்கலைக்கும் அழைத்துச் சென்று சொற்பொழிவு நடத்தி வைத்தது மறக்க முடியாதது.

திருக்குறள் மனப்பாடப் போட்டி, புதுமைப்பித்தன் நினைவுக் கவிதைச்சொல்வண்ணம் போட்டி, அறிஞர் அண்ணா நினைவுத் தமிழ்ச் சொற்பொழிவுப் போட்டி, கிருபானந்த வாரியார் நினைவு ஆன்மிகச் சொற்பொழிவுப் போட்டி, கண்ணதாசன் நினைவு தமிழ் மெல்லிசைப் போட்டி, திரு.வி.க. நினைவு கட்டுரைப் போட்டி, கல்கி நினைவு தமிழ் சிறுகதைப் போட்டி, நாமக்கல் கவிஞர் நினைவு கவிதைப் போட்டி ஆகிய போட்டிகளையும் நடத்திப் பரிசு வழங்குகிறது கொல்கத்தா தமிழ்மன்றம்.

வருகிற 2013-ஆம் ஆண்டு வைர விழாவை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த மன்றம் இன்னும் பல தமிழ்ப் பணிகளை ஆற்றிக் கொண்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com