இந்தியாவுக்கு எதிரான வாழ்வா சாவா ஆட்டத்தில் தான் அதிரடியாக விளையாடியிருக்க வேண்டுமென மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் சாய் ஹோப் தெரிவித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நேற்று (மார்ச் 1) நடைபெற்ற வாழ்வா சாவா ஆட்டத்தில் இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, சஞ்சு சாம்சனின் அதிரடியான ஆட்டத்தால் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான வாழ்வா சாவா ஆட்டத்தில் தான் அதிரடியாக விளையாடியிருக்க வேண்டுமென மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் சாய் ஹோப் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் என்மீது நானே பழிசுமத்திக் கொள்ளும் இடத்தில் இருக்கிறேன். நான் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்திருக்க வேண்டும். டாப் ஆர்டரில் பேட்டிங் செய்யும்போது, அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்திருக்க வேண்டும். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அது நடக்கவில்லை.
முக்கியமான ஆட்டத்தில் டாப் ஆர்டர் பேட்டர் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், பின்வரிசையில் களமிறங்கும் வீரர்களும் தடுமாறுவார்கள். ஆனால், நான் மோசமாக விளையாடியதாக நினைக்கவில்லை. நான் நன்றாக விளையாட முயற்சி செய்து விளையாடினேன். ஆனால், இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் நன்றாக பந்துவீசினார்கள்.
பவர்பிளேவில் 65-70 ரன்கள் குவிக்க வேண்டும் என விரும்பினோம். ஆனால், விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் எடுத்திருந்தோம். எங்களிடம் நல்ல பேட்டிங் ஆர்டர் இருப்பதால், பவர்பிளேவில் போதுமான ரன்கள் குவித்ததாகவே நினைக்கிறேன். ஆனால், எங்களது திட்டங்களை சில இடங்களில் சரியாக செயல்படுத்த முடியவில்லை என்றார்.
இந்தியாவுக்கு எதிரான இந்த வாழ்வா சாவா ஆட்டத்தில் கேப்டன் சாய் ஹோப் 33 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
Summary
West Indies captain Shai Hope has said that he should have played aggressively in the do-or-die match against India.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சொந்த மண்ணை எங்களுடைய கோட்டையாக மாற்ற வேண்டும்: மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன்

டி20 உலகக் கோப்பை முதல் அரையிறுதி: ஆஸ்திரேலியாவுக்கு 126 ரன்கள் இலக்கு!

டி20 உலகக் கோப்பை: வாழ்வா? சாவா? போட்டியில் இந்தியா பேட்டிங்!

டி20 உலகக் கோப்பை: அயர்லாந்துக்கு 129 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மே.இ.தீவுகள்!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview




