உலகத் தரத்துக்கு இணையாக, உயர் தொழில்நுட்ப இயந்திரங்களுடன் தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் துப்புரவுப் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் கூறியுள்ளது.
இது குறித்து தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதற்கு மாதத்துக்கு ரூ. 5 கோடி செலவிடப்
படுகிறது. 137 மெட்ரோ ரயில் நிலையங்களில் 3,500 பேர் துப்புரவுப் பணி மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் இப்பணியில் 20-25 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
தற்போது, உலகத் தரத்துக்கு இணையாக அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்ள கூடுதல் பணியாளர்களும், பணிகளை கண்காணிக்க மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். துப்புரவுப் பணிக்காக நவீன, உயர் தொழில்நுட்ப இயந்திரங்கள் கருவிகள் வழங்கப்பட்
டுள்ளன.
இவற்றைக் கையாள்வதற்கு குழுக்களின் தலைவர்கள், ஊழியர்களின் மேற்பார்வையாளர்களுக்கு குர்கானில் உள்ள "பிரிட்டிஷ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் கிளீனிங் சைன்சஸ்' நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மெட்ரோ ரயில் நிலையங்கள், அதைச் சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாக வைத்திருக்கும் வகையில் 24 மணி நேரமும் 3 ஷிஃப்டுகளில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளுக்காக புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பணியாளர்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்) மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதி நிதி (இ.எஸ்.இ.) ஆகியவற்றை வங்கிகள் மூலம் செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நவீன கருவிகளின் நுணுக்கங்களையும், தொழில் நுட்பங்களையும் மெட்ரோ நிலைய மேலாளர்கள், ரயில் பராமரிப்புக் கிடங்குகளின் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் தெரிந்து கொள்வதற்கு வசதியாக, அவர்களுக்கு பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருப்பு திரைப்படத்தில் நடித்தது ஏன்? இந்திரன்ஸ் விளக்கம்!
ஆலங்குளம் அருகே 6 பேருக்கு அரிவாள் வெட்டு: மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |


