தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு! எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அதிமுக நிர்வாகிகள் அவசர கூட்டம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!
/

பாரம்பரியத்தை பறைசாற்றும் ஓடிஸா அரங்குஎம். வெங்கடேசன்

இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் பாரம்பரிய அடையாளத்தை உணர்த்திடும் வகையில் அமைந்துள்ள ஒடிசா மாநிலத்தின் அரங்குக்கு பார்வையாளர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.

Updated On :24 நவம்பர் 2014, 12:07 am IST

இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் பாரம்பரிய அடையாளத்தை உணர்த்திடும் வகையில் அமைந்துள்ள ஒடிசா மாநிலத்தின் அரங்குக்கு பார்வையாளர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் சார்பில் பிரகதி மைதானத்தில் கடந்த 14-ஆம் தேதி தொடங்கிய "மகளிர் தொழில் முனைவோர்' தலைப்பிலான 34-ஆவது இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதையொட்டி, மாநிலங்களுக்கான பிரத்யேக தின கொண்டாட்டங்கள், கலை-கலாசார நிகழ்ச்சிகள், சாஸ்திரிய இசை, நாட்டியம், தெருமுனை நாடகம் ஆகியவை நடைபெற்று வருகின்றன. சீனா, ஜெர்மனி, ஜப்பான், தாய்லாந்து, தென்னாப்பிரிக்கா உள்பட 25 நாடுகள், பன்னாட்டு நிறுவனங்கள், மத்திய அரசுத் துறைகள், மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள் தங்களின் அரங்குகளை இங்கு அமைத்துள்ளன.

ஒடிஸா: வங்காள வரிகுடாவின் தென் கிழக்கு கடலோரப் பகுதியில் ஓடிசா மாநிலம் அமைந்துள்ளது. இந்த மாநில அரங்கின் முகப்பு அன்னப்பறவை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. நுழைவு வாயிலில் பூரி ஜெகந்நாதர் ஆலய வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ள மணற் சிற்பம் பார்வையாளர்களை ஒரே கணத்தில் ஈர்த்துவிடுகிறது. அரங்கில் நுழைந்தவுடன் மாநில அரசுத் துறைகளின் சாதனைத் திட்டங்கள் வரிசையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, ஒடிஸா மாநில சுற்றுலாத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள உள் அரங்கு பல்வேறு சுற்றுலாத் தகவல்களைத் தாங்கியுள்ளது. பூரி ஜெகந்நாதர் சொரூபங்கள், சூரியக் கோயில், கோனர்க் திருவிழா, லிங்க ராஜ் கோயில் ஆகிய சுற்றுலாத் தளங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒடிஸா மாநில வேளாண் துறை சார்பில் அந்த மாநிலத்தின் வேளாண் விளைபொருள்கள், வேளாண் சார்ந்த தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து வேளாண் துறை அலுவலர் பிரஃபுல்ல குமார் கூறுகையில், "வேளாண் அரங்கில் விவசாயம், தோட்டக் கலை, நீர்ப்பாசன மேலாண்மை ஆகிய தலைப்புகளில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள. சுமார் 875 பாரம்பரிய நெல் ரகங்கள், விவசாய விளைபொருள்களையும் காட்சிக்கு வைத்துள்ளோம்' என்றார்.

ஒடிஸா மாநில கலாசார ஆடைகளும் கண்காட்சிக்கு வருவோரை வெகுவாகக் கவருகின்றன.

இது குறித்து ஒடிசா நெசவாளர் கூட்டுறவுச் சங்கத்தின் எல்.கே. சூர் கூறுகையில், "எங்கள் மாநிலத்தில் கூட்டுறவுச் சங்ககங்கள் மூலம் வேயப்பட்ட பட்டுப் புடவைகள் ரூ.800 முதல் ரூ.1,200 வரை விற்கிறோம். இதை வட மாநிலத்தவர்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்' என்றார்.

காகிதக் கூழால் செய்யப்படும் கைவினைப் பொருள்களை விற்பனை செய்யும் ஹரிகர் கூறுகையில், "காகிதக் கூழால் செய்யப்பட்ட விநாயகர் சிலை ரூ.5,000 வரை விற்கப்படுகிறது. இது தவிர, வரவேற்பு அறையில் வைக்க உதவும் கோப்பைகள் ரூ.150-க்கும் விற்று வருகிறோம்' என்றார்.

ஒடிஸா அரங்கை சுற்றிப் பார்த்து வெளியேறும் பகுதியில் மரச் சிற்பக் கலைஞர் சரோஜி அளிக்கும் செய்முறை விளக்கங்களைப் பார்வையாளர்கள் திரண்டு வியப்புடன் பார்வையிடுகின்றனர்.

இந்திய சர்வதே வர்த்தகக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள ஒடிஸா மாநில அரங்கு அமó மாநிலத்தின் பெருமைகளை அறியவும், சுற்றுலா சென்று வரவும் பார்வையாளர்களை தூண்டும் வகையில் உள்ளது.

படங்கள்: டி.ராமகிருஷ்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.