சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ. 94.93ஆக நிறைவு!தொடரும் சரிவு! 4வது நாளாக வீழ்ச்சியுடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!!தமிழக பாட்மின்டன் வீராங்கனை துளசிமதிக்கு இரட்டை வெள்ளி!

மீண்டும் நிறம் மாறும் சாலைத் தடுப்புகள்! என்டிஎம்சி நடவடிக்கை

விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் தில்லியின் முக்கியச்  சாலைகளில் உள்ள தடுப்புகளை மீண்டும் கருப்பு - மஞ்சள் மற்றும் கருப்பு - வெள்ளை நிறங்களுக்கு மாற்றும் பணிகளை புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) மேற்கொண்டுள்ளது.

Updated On :

விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் தில்லியின் முக்கியச்  சாலைகளில் உள்ள தடுப்புகளை மீண்டும் கருப்பு - மஞ்சள் மற்றும் கருப்பு - வெள்ளை நிறங்களுக்கு மாற்றும் பணிகளை புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) மேற்கொண்டுள்ளது.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த ஆண்டு பொறுப்பேற்றது. இதைத் தொடர்ந்து தில்லியில் உள்ள முக்கியச் சாலைகளான ஃபெரோஷா ரோடு, அசோகா ரோடு, நாடாளுமன்றச் சாலை, ராஜீவ் செளக், ஜந்தர் மந்தர், ஆர்.கே.ஆஸ்ரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைத் தடுப்புகளுக்குப் புதிய வர்ணம் தீட்டும் பணிகளை 2014, அக்டோபர் மாதம் என்டிஎம்சி மேற்கொண்டது.

 அப்போது கருப்பு - வெள்ளை மற்றும் கருப்பு - மஞ்சள் ஆகிய நிறங்களில் இருந்த சாலை தடுப்புகள், பச்சை - ஊதா நிறத்துக்கு மாற்றப்பட்டன. இந்நிறங்களால் இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக வாகன ஓட்டிகளிடம் இருந்து அதிகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, பச்சை - ஊதா நிறத்துக்கு இடையே ஒளிரக்கூடிய வெள்ளி நிறப் பட்டை அமைக்குமாறு போக்குவரத்துக் காவல் துறையினர் என்டிஎம்சி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தினர். இதையடுத்து, இப்பட்டை பொருத்தப்பட்டது.

இந்நிலையில், சாலைத் தடுப்புகளின் நிறங்களை மீண்டும் கருப்பு - வெள்ளை, கருப்பு -  மஞ்சள் நிறத்துக்கே மாற்றும் பணிகளை என்டிஎம்சி நிர்வாகம் தற்போது மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து என்டிஎம்சி அதிகாரிகளுக்கு தொடர்பு கொள்ள முயற்சித்த போது, அழைப்பை ஏற்கவில்லை.

 இதைத் தொடர்ந்து, சாலைத் தடுப்புகளின் நிறங்களை மாற்றும் நடவடிக்கை குறித்து தில்லி போக்குவரத்து காவல் துறையின் கூடுதல் ஆணையர் சரத் அகர்வால் கூறியதாவது:

 "இது என்டிஎம்சியின் தனிப்பட்ட முடிவாகும். எனினும், சாலை விதிகளின்படி வாகன விபத்துகளைத் தடுக்கும் வகையில் இவ்வகை தடுப்புகளுக்கு வர்ணம் பூச வேண்டும். ஏனெனில், தில்லியில் மாறுபட்ட கால நிலைகள் உள்ளன. பனிக் காலங்களில் சாலையோரங்களின் தடுப்புகள் வாகன ஓட்டிகளுக்கு தெளிவாகத் தெரிய வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். என்டிஎம்சியின் நடவடிக்கைகளை நாங்கள் கண்காணித்து வருகிறோம். சாலை விதிகளுக்கு மாறாக அவர்களின் செயல்பாடுகள் இருக்கும்பட்சத்தில் நாங்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.