சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ. 94.93ஆக நிறைவு!தொடரும் சரிவு! 4வது நாளாக வீழ்ச்சியுடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!!தமிழக பாட்மின்டன் வீராங்கனை துளசிமதிக்கு இரட்டை வெள்ளி!

சேலத்தில் 550 கிலோ வெள்ளி கொள்ளை: குற்றவாளிகள் பிடிபட்டது எப்படி? - காவல் ஆணையர் விளக்கம்

சேலத்தில் வெள்ளிப் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் பிடிபட்டது குறித்து ஆணையர் அளித்த விளக்கம் பற்றி...

550 kg silver heist in Salem: How were the robbers caught? - Salem Commissioner's explanation

மீட்கப்பட்ட வெள்ப் பொருட்கள்கள்.

Updated On :

சேலத்தில் வெள்ளிப் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம், பள்ளப்பட்டி சின்னேரி வயக்காட்டைச் சேர்ந்த வெள்ளி வியாபாரி பாலசுப்பிரமணியின் (58) வெள்ளிப் பட்டறை பூட்டை உடைத்து, முகமூடி அணிந்து காரில் வந்த கும்பல் 550 கிலோ வெள்ளிப் பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றது. இதனையடுத்து, சேலம் காவல் ஆணையர் ஏ.ஜி.பாபு உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில், தஞ்சாவூரில் 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 323 கிலோ வெள்ளிப் பொருள்களைப் பறிமுதல் செய்தனர்.

குற்றவாளிகள் பிடிபட்டது தொடர்பாக சேலம் மாநகர காவல் ஆணையர் ஏ.ஜி. பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்தச் சம்பவத்தில் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கொள்ளையர்களைப் பிடித்துள்ளோம். இன்னும் 3 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை விரைவில் பிடித்துவிடுவோம். கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஏற்கெனவே பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதால், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்துவிட்டு, ஹார்ட் டிஸ்கையும் தூக்கிச் சென்றுவிட்டனர்.

இதனால், நவீன தொழில்நுட்பம் தெரிந்தவர்களைத் தனிப்படையில் இணைத்துக் குற்றவாளிகளைக் கண்டறிந்தோம். கொள்ளையடித்த பிறகு சுமார் 2,400 கிலோ மீட்டர் தூரம் சுற்றியுள்ளனர். இவர்கள் ஒரு இடத்தில் கூட சுங்கச்சாவடியைப் பயன்படுத்தவில்லை. இதனால் இவர்களைப் பிடிப்பதில் சற்று சிரமம் ஏற்பட்டது. எனினும், ஒரே ஒரு இடத்தில் மட்டும் கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட கார் சுமார் 2.30 மணி நேரம் நின்றிருந்தது. அதன் மூலமாகத்தான் கொள்ளையர்களை நெருங்கினோம்.

இந்தச் கொள்ளைச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிடிபட்டவர்களில் முக்கிய குற்றவாளியான அபிஷேக், ஏற்கெனவே கோவையில் கொலை வழக்கு ஒன்றில் கைதானவர். இதேபோல், மேலும் சிலரும் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளனர். எனவே, கைது செய்யப்பட்ட அனைவரையும் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளோம்"என்றார்.

மேலும், இனி முக்கிய இடங்களில் இரவு ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்த உள்ளதாகவும், வெள்ளிப் பட்டறை மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள் பாதுகாப்பாக லாக்கர் பெட்டிகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.