ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு திமுகவும் அதிமுகவும் எந்த காலத்திலும் இணையாது: டிடிவி தினகரன்கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி மேயர் பிரியாவை புறக்கணிக்கவில்லை: ராஜ்மோகன் பதில்!ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

சிவில் லைன்ஸ் பகுதியில் இளைஞர் சாவு: குடிநீர்த் தட்டுப்பாடு பிரச்னை காரணமா?

தில்லி சிவில் லைன்ஸ் குடியிருப்புப் பகுதியில் இளைஞர் தர்மேஷ் உயிரிழந்தார். குடிநீர்த் தட்டுப்பாடு பிரச்னை தொடர்பாக எழுந்த தகராறில் அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், அப்படி எந்தச் சம்பவமும் நிகழவில்லை என்று அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

Updated On :

தில்லி சிவில் லைன்ஸ் குடியிருப்புப் பகுதியில் இளைஞர் தர்மேஷ் உயிரிழந்தார். குடிநீர்த் தட்டுப்பாடு பிரச்னை தொடர்பாக எழுந்த தகராறில் அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், அப்படி எந்தச் சம்பவமும் நிகழவில்லை என்று அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

 தில்லி சிவில் லைன்ஸ் பகுதியில் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், முதல்வர் அரவிந்த் கேஜரிவால், அமைச்சர்கள், அரசு அதிகாரிகளின் குடியிருப்புகள் உள்ளன. இதையொட்டி, சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சாஹேன்சாஹி காத்ரா காலி, பீப்பள் வாலி காலி ஆகிய இரு குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பல ஆண்டுகளாக இப்பகுதியில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருவதாகப் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, குடிநீர் பிரச்னையையொட்டி ஏற்பட்ட தகராறில் பீப்பள் வாலி காலி பகுதியைச் சேர்ந்த தர்மேஷ் (32) திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதியில் வசித்து வரும் ஜெகதீஷ் காஷ்யப் (63) கூறுகையில், "எங்கள் பகுதியில் காலை 5 முதல் 7 மணி வரை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக அக்கம்பக்கத்தினர் சண்டையிட்டுக் கொள்வது வாடிக்கையே. அப்போது எல்லாம் போலீஸார் வந்து தடுத்து நிறுத்துவர். இம்முறை நிகழ்ந்த தகராறில் தர்மேஷ் உயிரிழந்துவிட்டார்' என்றார்.

இதுகுறித்து அப்பகுதியின் காங்கிரஸ் கட்சி பிரமுகரும், கவுன்சிலருமான குதி தேவி ஜாதவ் கூறுகையில், "குடிநீர் பிரச்னைக்காக இப்பகுதியில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. எனினும், இது எம்.எல்.ஏ.வின் அதிகாரத்துக்கு உள்பட்ட பகுதியாகும். எனவே, மக்களின் பிரச்னைக்கு எம்.எல்.ஏ. உரிய தீர்வு காண வேண்டும்' என்றார்.

 அப்பகுதியின் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ பங்கஜ் புஸ்கர் கூறுகையில், "இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்ததாக என் கவனத்துக்கு வரவில்லை. இப்பிரச்னை உண்மையெனில் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

 தில்லி ஜல் போர்டு தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.எஸ்.யாதவ் கூறுகையில், "தில்லியில் எந்தப் பகுதியிலும் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்படவில்லை. இது அம்மக்கள் பயன்படுத்தும் நீர் இறைக்கும் மோட்டார் பம்ப்களில்தான் பிரச்னை உள்ளது. இப்பகுதியில் பிரச்னைக்குரிய குடிநீர் பைப்புகளை தில்லி ஜல் போர்டு பொருத்தவில்லை. எனவே, இது அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பைப்புகள் ஆகும்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.