மேற்கு வங்கத்தில் நடை பெற்ற சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக மத்திய முன்னாள் நிதி
அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்துக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது.
மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு வரும் 10ஆம் தேதி விசாரணைக்கு வருமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இதுதொடர்பாக தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, அழைப்பாணை எதுவும் நளினிக்கு அனுப்பவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 6-ஆவது துணை குற்றப்பத்திரிகையில் நளினியின் பெயரையும் சிபிஐ குறிப்பிட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!

யுவன் குரலில் ஜேசன் சஞ்சய்யின் சிக்மா படத்தின் லிரிக்கல் விடியோ!

9 நாள்களாக உண்ணாவிரதம் இருப்பவரை காவல் துறை தாக்குவது சரியா?

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK


