டிடிஇஏ லோதி எஸ்டேட் பள்ளி ஆண்டு விழா
லோதி எஸ்டேட்டில் உள்ள தில்லி தமிழ் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளியின் ஆண்டு விழா புதன் கிழமை நடைபெற்றது.


லோதி எஸ்டேட்டில் உள்ள தில்லி தமிழ் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளியின் ஆண்டு விழா புதன் கிழமை நடைபெற்றது.
பள்ளியின் முன்னாள் மாணவி வத்சலா தலைமை வகித்தார். பள்ளியின் முன்னாள் முதல்வர் விஜயலெட்சுமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
டிடிஇஏ செயலர் ராஜு, இணைச் செயலர் ரவிக்குமார் நாயக்கர், பள்ளியின்இணைச் செயலர் முருகன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சுப்பிரமணியம், செயலர் யஷ் ராஜா, பிற டிடிஇஏ பள்ளிகளின் இணைச் செயலர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பள்ளி முதல்வர் உமா ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பள்ளியின் துணை முதல்வர் ரஞ்சன் குப்தா ஆண்டறிக்கையை வாசித்தார். 2016-17 ஆம் கல்வியாண்டில் கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. துணை முதல்வர் விசாலாட்சி நன்றியுரை வழங்கினார். பரிசளிப்பு விழாவைத் தொடர்ந்து நவரசத்தை வெளிப்படுத்தும் வகையில் நடனம், நாடகம் ஆகியவை இடம் பெற்றன.
முன்னதாக பள்ளியின் செயல்முறைக் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் போர்டின் இயக்கத்தை விழாத் தலைவர் வத்சலா தொடங்கி வைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...