ஆம் ஆத்மி எம்எல்ஏ அலுவலகத்தில் மின்னணு சாதனங்கள் திருட்டு

தென்கிழக்கு தில்லி, கால்காஜி பகுயில் உள்ள ஆத்மி எம்எல்ஏ செளரவ் பரத்வாஜ் அலுவலகத்தில் மின்னணு சாதனங்கள் திருட்டுப் போயுள்ளன. இது குறித்து காவல் துறை உயரதிகாரி வியாழக்கிழமை கூறியதாவது:
Updated on
1 min read

தென்கிழக்கு தில்லி, கால்காஜி பகுயில் உள்ள ஆத்மி எம்எல்ஏ செளரவ் பரத்வாஜ் அலுவலகத்தில் மின்னணு சாதனங்கள் திருட்டுப் போயுள்ளன. இது குறித்து காவல் துறை உயரதிகாரி வியாழக்கிழமை கூறியதாவது:
கால்காஜி பகுதியில் உள்ள சமுதாய மையத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏ செளரவ் பரத்வாஜின் அலுவலகம் அமைந்துள்ளது. அங்கு மர்ம நபர்கள் நுழைந்து மின்னணு சாதனங்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். செளரவ் பரத் வாஜ் வியாழக்கிழமை தனது அலுவலகத்துக்கு சென்றபோது திருட்டு நடந்துள்ளதைக் கண்டார். எல்இடி டிவி, கணினி, அங்கு அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பதிவு செய்யும் டிஜிட்டல் விடியோ ரிக்கார்டர் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. விடியோ ரிக்கார்டர் கொள்ளையடிக்கப்பட்டதால், கொள்ளையர்களை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதே போன்று கடந்த வாரம்  மத்திய தில்லி, ரெளஸ் அவன்யுவில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகத்திலும் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டன.   இது தொடர்பாக திருட்டுப் பொருள்களை வாங்கிய பழைய பொருள்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வரும் மூவர் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com