கான்கிரீட் கல் உடைப்பு இயந்திரத்தில் சிக்கி சிறுமி பலி
கான்கிரீட் கல் உடைப்பு இயந்திரத்திற்குள் 14 வயது சிறுமி தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.


கான்கிரீட் கல் உடைப்பு இயந்திரத்திற்குள் 14 வயது சிறுமி தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினர் கூறியதாவது:
நொய்டா அருகே உள்ள சிஜாராசி கிராமத்தைச் சேர்ந்த சிறுமி குஜான், கோவர்தன் பூஜை செய்வதற்காக பசுவின் சாணத்தைத் தேடி சென்றுள்ளார். அப்போது, கால் தவறி கான்கரீட் கல் உடைப்பு இயந்திரத்திற்குள் விழுந்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
கிராமவாசிகள் அப்பகுதியில் கூடி போராட்டம் நடத்தினர். அதையடுத்து, அந்த கான்கிரீட் கல் உடைப்பு நிறுவனத்துக்கு மாவட்ட ஆட்சியர் சீல் வைக்க உத்தரவிட்டார். போராட்டம் நடத்தியவர்கள் அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...