சாகித்ய அகாதெமி இணையதளத்தில் எழுத்தாளர்களின் தகவல்கள் டிஜிட்டல் முறையில் பதிவேற்றம்
இலக்கிய அமைப்பான சாகித்ய அகாதெமியின் இணையதளத்தில் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள் குறித்த தகவல்களை டிஜிட்டல் முறையில் பதிவேற்ற புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.


இலக்கிய அமைப்பான சாகித்ய அகாதெமியின் இணையதளத்தில் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள் குறித்த தகவல்களை டிஜிட்டல் முறையில் பதிவேற்ற புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், மொழிகளைச் சேர்ந்த எழுத்தாளர்களின் சிறு விவரக் குறிப்புகள் அடங்கிய இரு தொகுதிகளை 1999-ஆம் ஆண்டில் சாகித்ய அகாதெமி பதிப்பித்து வெளியிட்டது.
தற்போது பல்வேறு எழுத்தாளர்களின் விவரத் தகவல்கள் டிஜிட்டல் முறையில் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், எழுத்தாளர்கள் தாங்களாகவே சாகித்ய
அகாதெமி இணையதளம்(http://sahitya-akademi.gov.in) வாயிலாக தங்களது விவரக் குறிப்புகளை அளித்து, பதிவேற்றம் செய்துகொள்வதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் சாகித்ய அகாதெமியின் நூலகர் டாக்டர் சுஃபியான் அகமது வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
சில ஆண்டுகளாக இந்தப் பணியை மேற்கொண்டு வருகிறோம். இதன் மூலம் தற்போது வரை "இந்திய எழுத்தாளர்கள் யார்? எவர்?' எனும் பிரிவில் 4,735 எழுத்தாளர்களின் சுய விவரத் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்தும் இலக்கிய ஆர்வலர்கள் சாகித்ய அகாதெமி இணையதளம் வாயிலாக எழுத்தாளர்கள் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.
"லைவ் வெப்கேஸ்ட்' வசதி: சாகித்ய அகாதெமியில் நடைபெறும் இலக்கியத் திருவிழாக்கள், கருத்தரங்குகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளை சாகித்ய அகாதெமியின் இணையதளம் வாயிலாக நேரலையாக ஒளிபரப்பும் வகையில் "லைவ் வெப்கேஸ்ட் ' வசதியும் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், சாகித்ய அகாதெமியின் சார்பில் நடத்தப்படும் முக்கிய நிகழ்ச்சிகள் "யூ-டியூப்' மூலம் பதிவேற்றம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தில்லியில் உள்ள சாகித்ய அகாதெமி நூலகத்தில் பல்வேறு மொழிகள் சார்ந்த சுமார் 1.75 லட்சம் புத்தகங்கள் உள்ளன. இதில் 13 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
மேலும், மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் உள்ள மாநில நூலகங்களிலும் சுமார் 75 ஆயிரம் நூல்கள் வைக்கப்பட்டுள்ளன என்றார் சுஃபியான் அகமது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...