கல்வி நிறுவனம் நடத்தி போலி சான்றிதழ்கள் வழங்கிய 2 பேர் கைது
கல்வி நிறுவனம் நடத்தி போலி கல்விச் சான்றிதழ்களை வழங்கியதாக 2 பேரை தில்லி போலீஸார் கைது செய்தனர்.


கல்வி நிறுவனம் நடத்தி போலி கல்விச் சான்றிதழ்களை வழங்கியதாக 2 பேரை தில்லி போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து தில்லி காவல் துறையின் குற்றப் பிரிவு இணை ஆணையர் அலோக் வர்மா செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
பல்வேறு திறந்தவெளி பல்கலைக்கழகங்களின் பட்டச் சான்றிதழ்களை போலியாக தயாரிப்பதிலும், விநியோகப்பதிலும் ஒரு கும்பல் ஈடுபடுவதாக குற்றப் பிரிவு போலீஸாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, சாணக்கியபுரியில் உள்ள குற்றப் பிரிவு போலீஸார் தில்லி முன்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே பிப்ரவரி 23-ஆம் தேதி இருவர் கைது செய்யப்பட்டனர்.
இருவரும் ஹரியாணாவைச் சேர்ந்த பல்ராஜ், சந்தீப் சஹல் ஆகியோர் என விசாரணையில் தெரியவந்தது. இருவரும் "சத்யம் எஜுகேஷன்' என்ற பெயரில் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினர். தனிப் பயிற்சி மையங்களை அணுகி அதில் பயிலும் மாணவர்களிடம் அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறினர்.
பின்னர், திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் அந்த மாணவர்களை பட்டப் படிப்புகளில் முறைப்படி சேர ஏற்பாடு செய்தனர். அதைத் தொடர்ந்து, தேர்வுத் தாள்களை மாணவர்களின் வீட்டு முகவரிக்கு அனுப்பி விடையை அவர்களை எழுதச் சொல்லி பின்னர் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி குறுக்கு வழிகள் மூலம் அவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க உதவியுள்ளனர். மேலும், பல்வேறு பல்கலைக்கழகங்களின் பெயர்களில் போலி மதிப்பெண் சான்றிதழ், பட்டச் சான்றிதழ்களை வழங்கியுள்ளனர். இருவரும் பட்டதாரிகள் என்பதும், குறுக்கு வழியில் அதிக பணம் ஈட்டும் ஆசையில் இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. இருவரிடமிருந்தும் மடிக் கணினி, 3 பென் டிரைவ்கள், போலி கல்விச் சான்றிதழ்கள், பல்வேறு பல்கலைக்கழகங்களின் ரப்பர் ஸ்டாம்புகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக அலோக் வர்மா தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...