பேருந்து, மெட்ரோ சேவைகளில் இன்று மாற்றம்

ஹோலி பண்டிகைக் கொண்டாட்டங்களையொட்டி, தில்லி போக்குவரத்து நிறுவன பேருந்துகள் (டிடிசி) வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு பிறகுதான் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

ஹோலி பண்டிகைக் கொண்டாட்டங்களையொட்டி, தில்லி போக்குவரத்து நிறுவன பேருந்துகள் (டிடிசி) வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு பிறகுதான் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஹோலி பண்டிகையின்போது தில்லி பேருந்துகளில் கூட்டம் குறைவாக காணப்படும். ஆகையால், வெள்ளிக்கிழமை 2 மணிக்கு பிறகு தேவைப்படும் மார்க்கங்களில் மட்டும் 896 டிடிசி பேருந்துகள் மட்டும் இயக்கப்படும். இந்தப் பேருந்துகள் எந்த வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன என்பது குறித்த விவரங்களை தொலைபேசி உதவி எண்: 180018181 மூலம் பயணிகள் தெரிந்து கொள்ளலாம் என்று அவர் தெரவித்தார்.
மெட்ரோ சேவை: இதேபோல், வெள்ளிக்கிழமையன்று மதியம் 2.30 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படும் என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணிக்கு மேல் வழக்கமான மெட்ரோ ரயில் சேவை இயக்கத்தில் இருக்கும் என்றும் வெள்ளிக்கிழமை முழுவதும் மெட்ரோ ஃபீடர் பேருந்து சேவை இருக்காது என்றும் மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com