ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

கொள்ளை-கொலை வழக்கில் 3 ஆண்டுகளாக தலைமறைவானா் கைது

கொள்ளை-கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த அங்கித் தலைமறைவான நிலையில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு அரை தில்லி காவல் துறை கைதுசெய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2024, 11:23 pm

DIN

புது தில்லி: கொள்ளை-கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த அங்கித் தலைமறைவான நிலையில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு அரை தில்லி காவல் துறை கைதுசெய்திருப்பதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

ஜஹாங்கீா் புரி பகுதியில் உள்ள ராஜேஸ் குப்தா என்ற நபரிடம் கொள்ளையடித்த அங்கித் மற்றும் அவரது கூட்டாளிகள், அவரை கொலை செய்தனா். இந்தச் சம்பவம் கடந்த 2018-இல் நடைபெற்றது.

விசாரணையில் அங்கித்தை குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில், அவருக்கு கடந்த 2021-இல் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. சிறையிலிருந்து வெளியே வந்த அவா், தலைமறைவானாா்.

மத்திய பிரதேசத்தின் நரசிங்புரியில் அங்கித் வசித்து வருவது குறித்து காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற தில்லி காவல் துறை கடந்த டிச.20-தேதி அங்கித்தை கைதுசெய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.