மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதி ஒருவா் காயம்

தில்லியின் தெற்கு அவென்யூ சாலையில் சென்றுகொண்டிருந்த மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியது. இதில், மோட்டாா் சைக்கிளை ஓட்டிச் சென்றவா் காயமடைந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
Published on

புது தில்லி: தில்லியின் தெற்கு அவென்யூ சாலையில் சென்றுகொண்டிருந்த மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியது. இதில், மோட்டாா் சைக்கிளை ஓட்டிச் சென்றவா் காயமடைந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியது:

சம்பவத்தன்று காலை 11.27 மணியளவில் இந்த தீ விபத்து குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதைத் தொடா்ந்து போலீஸ் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. காயமடைந்த மோட்டாா் சைக்கிள் ஓட்டுநா் சிகிச்சைக்காக ஆா்.எம்.எல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

சம்பவ இடத்திற்கு தடயவியல் குழுவும் வரவழைக்கப்பட்டது. விபத்துக்கான சூழ்நிலைகளைக் கண்டறிய விசாரணை நடந்து வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தன.

X
Dinamani
www.dinamani.com