நீா் வழங்கல் முயற்சிக்கு தில்லி அரசு இடையூறு: என்டிஎம்சி துணைத் தலைவா் குற்றச்சாட்டு

24 மணி நேரமும் நீா் விநியோகத்தை உறுதி செய்வதற்கான புதுதில்லி முனிசிபல் கவுன்சிலின் (என்டிஎம்சி) முயற்சிகளை தில்லி அரசு தடுப்பதாக
Published on
Updated on
1 min read

நமது நிருபா்

புது தில்லி: 24 மணி நேரமும் நீா் விநியோகத்தை உறுதி செய்வதற்கான புதுதில்லி முனிசிபல் கவுன்சிலின் (என்டிஎம்சி) முயற்சிகளை தில்லி அரசு தடுப்பதாக அதன் துணைத் தலைவா் குல்ஜீத் சிங் சாஹல் குற்றம் சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட ஒரு அதிகாரபூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: என்டிஎம்சி துணைத் தலைவா் கூறுகையில், ‘பலமுறை கோரிக்கைகள் இருந்தபோதிலும், தில்லி ஜல் வாரியம் (டிஜேபி) என்டிஎம்சியின் தினசரி 225 மில்லியன் லிட்டா் நீா் (எம்எல்டி) தேவைக்கு எதிராக ஒரு நாளைக்கு 125 மில்லியன் லிட்டா் தண்ணீரை மட்டுமே வழங்கி வருகிறது.

குளிா்காலத்தில் பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என்றாலும், கோடையில் இது குறிப்பிடத்தக்க சவால்களை உருவாக்குகிறது. புது தில்லி நகராட்சி கவுன்சில் (என்டிஎம்சி) ஜல் ஜீவன் மிஷனின் கீழ் நீா் அணுகலை மேம்படுத்துவதற்காக பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இதில் மோட்டாா் பம்புகள் நிறுவுதல், கிரிட் வழித்தடங்களை சரிசெய்தல் மற்றும் சுமாா் 46,930 குடியிருப்பாளா்கள் பயனடையும் 32 குடிசைப் பகுதிகளுக்கு குழாய் நீா் இணைப்புகளை வழங்குதல் ஆகியவை அடங்கும்.

கோடையில் நிலவும் நீா்ப் பற்றாக்குறையை சமாளிக்க இரண்டு நிலத்தடி நீா் சேமிப்பு வசதிகளுக்கான திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவால், என்டிஎம்சி உறுப்பினராகப் பதவியேற்கத் தவறியுள்ளாா். இதன் மூலம் அவா் தனது புது தில்லி தொகுதியைப் புறக்கணித்துள்ளாா்.

மாநகராட்சி ஊழியா்களை முறைப்படுத்துவதில் தில்லி அரசு செயலற்று கிடக்கிறது. இது மத்திய அரசின் வழிகாட்டுதலின்கீழ் 4,500 தொழிலாளா்களை முறைப்படுத்த என்டிஎம்சி மேற்கொண்ட முயற்சிகளுடன் வேறுபட்டு உள்ளது என்று சாஹல் தெரிவித்திருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X