ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

கேஜரிவால் பதவி விலக அஜய் மாக்கன் வலியுறுத்தல்

தலைநகர் தில்லியில் ரேஷன் அட்டை முறைகேடு விவகாரத்தில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் வலியுறுத்தியுள்ளார்.

Updated On :6 ஏப்ரல் 2018, 4:03 am IST

தலைநகர் தில்லியில் ரேஷன் அட்டை முறைகேடு விவகாரத்தில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது: ரேஷன் அட்டை வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுக்குத் தலைமை வகிக்கும் முதல்வர் கேஜரிவால் இந்த விவகாரத்திலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. 
இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்ற பிறகும் மாவட்டக் கண்காணிப்புக் குழுவில் இடம் பெற்றுள்ள பாஜக எம்பிக்களும், ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை. 
இந்த ரேஷன் அட்டை முறைகேட்டால் ஏழைகளுக்குக் கிடைத்திருக்க வேண்டிய ஆயிரக் கணக்கான டன் உணவுப் பொருள்கள் கிடைக்கவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் தார்மிகப் பொறுப்பேற்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பதவி விலக வேண்டும் என்றார் அஜய் மாக்கன். பேட்டியின் போது தில்லி முன்னாள் அமைச்சர் ஹாரூண் யுசுஃப் உடனிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.