தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) ஆரம்பப் பள்ளிகளில் காலியாகவுள்ள 166 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எஸ்டிஎம்சி கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு தில்லி மாநகராட்சிப் பள்ளிகளில் 166 ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்த இடங்களை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தகுதியானவர்கள் ஆகஸ்ட் 1 முதல் 14- ஆம் தேதி மாலை 5 மணி வரையிலும் மாநகராட்சி இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆசிரியர் பணி நியமனம் பெறுபவர்களுக்கு ரூ. 35,400 ஊதியமாக வழங்கப்படும் என்று அதிகாரிகளள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








