கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

வெளிநாடுகளில் இருந்து தில்லிக்கு 13% காற்று மாசு: ஆய்வில் தகவல்

தில்லி பனிக்காலத்தில் ஏற்படும் காற்று மாசுக்கு வெளிவிவகாரங்களே 64 சதவீதம் காரணம் என்றும் வெளிநாடுகளிலிருந்து தில்லிக்கு 13 சதவீதம் மாசு

Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

தில்லி பனிக்காலத்தில் ஏற்படும் காற்று மாசுக்கு வெளிவிவகாரங்களே 64 சதவீதம் காரணம் என்றும் வெளிநாடுகளிலிருந்து தில்லிக்கு 13 சதவீதம் மாசு வருகிறது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், காற்று மாசுவைத் தடுக்க அரசுகள் மேற்கொண்டாலும் மாசு அதிகரித்து கொண்டேதான் செல்கிறது என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிசக்தி, வளங்கள் நிறுவனமும் (டெரி), இந்திய வாகன ஆய்வு சங்கமும் (அரெய்) இணைந்து தில்லி காற்று மாசு குறித்து ஆய்வு நடத்தின. அதில், "தில்லிக்கு  வெளிநாடுகளிலிருந்து 13 சதவீதம் மாசு வருகிறது. பனிக்காலத்தில் 64 சதவீதம் மாசுக்கு தில்லிக்கு வெளியே உள்ள பல்வேறு விவகாரங்களே காரணம்.
தில்லி மாசுவைத் தடுக்க அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவந்தாலும், தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசுவால் தில்லியின் காற்றின் தரம் மேலும் மோசமடைகிறது. இதைத் தடுக்க அரசுகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். தொழிற்சாலைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். என்சிஆர் பகுதிகளில் அடுப்புகளை எரிக்க பயன்படுத்தப்படும் மாட்டு சானத்தை முழுமையாக தடுக்க வேண்டும். பயிர்களில் பயிர்க்கழிவுகளை எரிப்பதைத் தடுக்க வேண்டும். மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரிக்கு பதிலாக  பயிர்க்கழிவுகளை பயன்படுத்த வேண்டும்' என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.