சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

திறந்தவெளியில் சிறுநீர் கழித்ததால் தாக்குதல்: மூவர் காயம்

தில்லியில் திறந்தவெளியில் சிறுநீர் கழித்தவர்கள் மீது செங்கல், இரும்புக் கம்பியால் தாக்கியதாக மூன்று ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

தில்லியில் திறந்தவெளியில் சிறுநீர் கழித்தவர்கள் மீது செங்கல், இரும்புக் கம்பியால் தாக்கியதாக மூன்று ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் மூன்று இளைஞர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. 
இது குறித்து தில்லி காவல் துறையினர் வியாழக்கிழமை கூறியதாவது: தில்லி ரன்ஹோலா பகுதியைச் சேர்ந்த அஜய், ரிஷி, அனில். சம்பவத்தன்று அஜய்யும், அனிலும் பஞ்ச்சீல் என்கிளேவ் பகுதியில் உள்ள ரிஷியின் அலுவலகத்திற்கு உணவு உண்பதற்காக சென்று கொண்டிருந்தனர்.
ரிஷியின் அலுவலகம் அருகே சிறுநீர் கழிப்பதற்காக நின்றனர். அப்போது, அவர்களை இரும்புக் கம்பி, செங்கலால் மூவர் தாக்கினர். தடுக்க முயன்ற ரிஷியும் தாக்கப்பட்டார்.
 மூன்று பேரும் மயங்கி கீழே விழுந்த பின்னர், அவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய கார் ஓட்டுநர்கள் சஞ்சீவ், சுனில், ராம்பீர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையின் போது, தாங்கள் குற்றத்தில் ஈடுபட்டதை மூவரும் ஒப்புக் கொண்டனர். மேலும், குற்றச் செயலில் ஈடுபட்ட போது அவர்கள் குடிபோதையில் இருந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.