எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

ஆம் ஆத்மியுடன் கூட்டணி? ஷீலா தீட்சித் பதில்

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தில்லியில் ஆம் ஆத்மி கட்சியுன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தில்லியில் ஆம் ஆத்மி கட்சியுன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தைத் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், "ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைப்பதா இல்லையா என்பது குறித்து காங்கிரஸ் மேலிடம்தான் இறுதி முடிவு எடுக்கும்' என்று முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் தெரிவித்தார்.
தொடர்ந்து மூன்று முறை தில்லியின் முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தும், தில்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கனும் கடந்த ஜூன் மாதம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், "ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை' என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான கட்சிகளின் கூட்டம் கடந்த 10 ஆம் தேதி தில்லியில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியும் முதல் முறையாக பங்கேற்றது. 
இதையடுத்து, 2019ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் தில்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து போட்டியிட காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. எனினும், காங்கிரஸ் மேலிடத்தின் இந்த முடிவுக்கு தில்லி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மத்தியில் அதிருப்தி காணப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தை குறித்து ஷீலா தீட்சித்திடம் கேள்வி கேட்டபோது, "இந்த கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. காங்கிரஸ் மேலிடம்தான் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டும். கட்சி மேலிடம் எடுக்கும் எந்தஒரு முடிவாக இருந்தாலும், அதை நான் கேள்வி கேட்கமாட்டேன்' என்றார்.
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தில்லியில் உள்ள மொத்தம் 7 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது. இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி இரண்டாம் இடத்துக்கும், காங்கிரஸ் கட்சி மூன்றாம் இடத்துக்கும் தள்ளப்பட்டது. தற்போது 2019ஆம் ஆண்டு தேர்தலில்  ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் இது பாஜகவுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.