மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

இன்று தில்லி சட்டப்பேரவைக் கூட்டம்: முக்கியப் பிரச்னைகளை எழுப்ப பாஜக திட்டம்

தில்லி சட்டப்பேரவையின் இரு நாள் கூட்டத் தொடர் வியாழக்கிழமை (டிசம்பர் 20) தொடங்குகிறது.

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

தில்லி சட்டப்பேரவையின் இரு நாள் கூட்டத் தொடர் வியாழக்கிழமை (டிசம்பர் 20) தொடங்குகிறது.
முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் தில்லிஅமைச்சரவைக் கூட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, தில்லி அரசு அலுவல் குறித்து சட்டப்பேரவையில் விவாதிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தில்லி சட்டப்பேரவையின் இரு நாள் கூட்டத் தொடரை டிசம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது. அமைச்சரவையின் பரிந்துரை பேரவைத் தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி விவகாரம், தில்லி அரசின் நிதி செலவினங்கள் தொடர்பான விவகாரம் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, சட்டப்பேரவையில் எழுப்பவுள்ள முக்கிய பிரச்னைகள் குறித்து பாஜக மூத்த தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான விஜேந்தர் குப்தா செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: 
முக்கியப் பிரச்னைகளை விவாதிப்பது தொடர்பாக பேரவைத் தலைவரை வியாழக்கிழமை சந்திப்போம். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பும் பிரச்னைகளுக்கும், கேள்விகளுக்கும் அரசு பதில் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவோம். மேலும், அலுவல் ஆலோசனைக் குழுக் கூட்டத்தை கூட்டவும் வலியுறுத்தப்படும்.
ஈத்கா பகுதியில் இறைச்சிக் கூடம் இருந்த இடத்தில் மாநகராட்சி சார்பில் வாகன நிறுத்த மையம் உருவாக்க தில்லி அரசு முட்டுக்கட்டையாக உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் பிரச்னையை எழுப்புவோம். தில்லி அரசுப் பள்ளிகளில் பெற்றோர்களிடம் வாக்காளர் அடையாள அட்டை கேட்கப்படுவது தொடர்பாகவும் பிரச்னை எழுப்பவுள்ளோம். தில்லி அரசு மருத்துவமனைகளின் நிலை மோசமடைந்துள்ளது. ஊழல், முறைகேடுகள் அதிகரித்துள்ளன.
தில்லி அரசு கொண்டு வந்துள்ள உடல் பரிசோதனைத் திட்டத்தின் கீழ், குரு தேஹ் பகதூர் மருத்துவமனையில் முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என பேரவையில் வலியுறுத்துவோம். ரேஷன் பொருள்கள் விநியோகத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்தும் கேள்வி எழுப்புவோம்.
சிறு தொழில் நடைபெறும் கட்டடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீலிங் நடவடிக்கை குறித்தும் பேரவையில் கேள்விகள் முன்வைக்கப்படும். பேரவையில் ஏன் கேள்வி நேரம் நடைபெறுவதில்லை? எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளைக் கண்டு தில்லி அரசு ஏன் அஞ்ச வேண்டும்? எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு உரிய நேரம் ஒதுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துவோம் என்றார் விஜேந்தர் குப்தா. பேட்டியின் போது, பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜெகதீஷ் பிரதான், ஓ.பி. சர்மா உள்ளிட்டோர் உடனிருந்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.