சேலம் - கோவை இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் (என்எச்-47) சேலம் முதல் செங்கப்பள்ளி வரையிலான சாலைப் பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்வது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் திருப்பூர் மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் வி.சத்தியபாமா மனு அளித்து முறையிட்டார்.
தில்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை அவரது அலுவலகத்தில் புதன்கிழமை மாலை சந்தித்து வி.சத்தியபாமா எம்.பி. அளித்து மனுவில் கூறியிருப்பதாவது: "பாரத் பரியோஜனா' திட்டத்தின் கீழ் சேலம் முதல் செங்கப்பள்ளி வரையிலான சுமார் 103 கிமீ தொலைவுக்கு 4 வழி மற்றும் 8 வழி சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு எனது நன்றி. ஆனால், இந்த நீண்டதூர சாலையில் மேம்பாலங்கள் அமைக்கப்படவில்லை. இதனால், அடிக்கடி அதிக வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக, பெருந்துறை - கஞ்சிக்கோவில் - கோவிந்தபாடி குறுக்குச் சாலை (78/4 கிலோ மீட்டரில்), பெருந்துறை - துடுப்பதி - மக்கினாம்கோம்பை குறுக்குச் சாலை (80/8 கிலோ மீட்டரில்), கொளத்துப்பாளையம் - விஜயமங்கலம் குறுக்குச் சாலை (89/10 கிலோ மீட்டரில்), பெருந்துறை - பெத்தம்பாளையம் - கஞ்சிகோவில் குறுக்குச் சாலை (79/4 கிலோ மீட்டரில்) ஆகியவை அடிக்கடி வாகன விபத்துகள் நிகழும் பகுதிகளாக உள்ளன. இதற்கு அப்பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படாததுதான் காரணமாகும்.
இது தவிர, தேசிய நெடுஞ்சாலையில் (என்எச் 47) 88/100 கிலோ மீட்டரில் இருபுறமும் அமைந்துள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடி குறுக்கே பொதுமக்கள் கடந்து செல்வதற்காக பாதை எதுவும் அமைக்கப்படவில்லை. இதனால், இரு சக்கர மற்றும் அத்தியாவசிய வாகனங்கள் செல்வதற்கு மிகுந்த சிரமம் உள்ளது. எனவே, விஜயமங்கலம் பகுதி சுங்கச்சாவடியின் குறுக்கே சுரங்கப்பாதை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.
இதுகுறித்து வி. சத்தியபாமா எம்.பி. கூறுகையில், "சேலம்- செங்கப்பள்ளி பகுதி தேசிய நெடுஞ்சாலையில் வாகன விபத்துகள் நடைபெறும் பகுதியில் மேம்பாலங்கள் அமைக்கவும், சுங்கச் சாவடி பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கவும் அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை மனு அளித்தேன். மனுவை பரிசீலனை செய்த அமைச்சர், இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழர்களின் இதயங்களை வென்ற பாரதிராஜா ஒரு பார்வை..!

படித்து வாங்கிய பட்டமா? சாதி ஒழிப்பில் பாரதிராஜா படங்கள்!
சென்னையில் கள்ளநோட்டுகள் பறிமுதல் விவகாரம்! பாக். பயங்கரவாதிகளுடன் தொடர்பா?

அமெரிக்காவில் அதிக அளவில் முதலீடு செய்யும் இந்தியா: அமெரிக்க அரசு மூத்த அதிகாரி
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai


