தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

பிரதமர் இல்லத்தை நோக்கி பேரணியாக சென்ற தமிழக விவசாயிகள் கைது

தில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழக விவசாயிகள், பிரதமர் இல்லத்தை நோக்கிப் பேரணியாக செல்ல முயன்றபோது, போலீஸார்

Updated On :29 மார்ச் 2018, 7:22 pm

தில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழக விவசாயிகள், பிரதமர் இல்லத்தை நோக்கிப் பேரணியாக செல்ல முயன்றபோது, போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனிடையே, தமிழக விவசாயிகளின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு ஆகியவை தில்லி நாடாளுமன்றச் சாலையில் நான்காவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது அவர்கள் கை தட்டியும் கும்மி அடித்தும் வித்தியாசமான முறைகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இந்நிலையில் மதியம் 2.30 அளவில் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நாடாளுமன்றச் சாலைக்கு அருகிலுள்ள வெளியுறவுத் துறை அமைச்சகம் அருகே விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, அங்கிருந்து பிரதமர் இல்லத்தை நோக்கிப் பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை தில்லி போலீஸார் கைது செய்து வாகனத்தில் ஏற்றி அருகிலுள்ள மந்திர் மார்க் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இது குறித்து பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கப் போவதில்லை. எனவே, உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தலையிட்டு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உயிர் போகும் வரை போராடுவோம். தில்லியில் எங்களது போராட்டத்தை பிரதமர் மோடி ஒடுக்க நினைக்காலம். 
தமிழக விவசாயிகள் ஒருங்கிணைந்து பெரியளவில் போராட்டம் நடத்த உள்ளோம். தில்லி போராட்டம் தற்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் போராட்டங்கள் தொடரும். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை செயல்படவிடாமல் போராட்டம் நடத்த உள்ளோம் என்றார் அவர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.