ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை அம்மாநில அரசுடன் பேசி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எடுத்துள்ளார் என்று நாடாளுமன்ற மக்களவைக் அதிமுக குழுத் தலைவரும், திருவள்ளூர் தொகுதி எம்பியுமான பி.வேணுகோபால் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்மார்க் பகுதியில் சுற்றுலா சென்ற பேருந்து மீது, அப்பகுதியில் போராட்டம் நடத்தியவர்கள் கற்களை வீசினர். இச்சம்பவத்தில் பேருந்தில் பயணம் செய்த திருவள்ளூர் மாவட்டம், கரிமேடு பகுதியைச் சேர்ந்த திருமணி செல்வம் என்ற இளைஞர் கல்வீச்சுத் தாக்குதலில் காயமடைந்து உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடலையும், அவருடன் சுற்றுலா சென்ற அவரது குடும்பத்தினரையும் பத்திரமாக விமானத்தில் சென்னைக்கு அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.
இது தொடர்பாக அம்மாநில முதல்வர் மெஹபூபா முப்தியுடன் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பேசினார். இந்நிலையில், அங்கு சுற்றுலா சென்றுள்ள 135 தமிழர்கள் பத்திரமாக இருக்கவும், ஊர் திரும்பவும் தேவையான நடவடிக்கைளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை திருவள்ளூர் தொகுதி அதிமுக எம்பி பி.வேணுகோபால் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்துப் பேசினார். இது தொடர்பாக அவர் புதன்கிழமை கூறியதாவது:
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு தமிழகத்தில் இருந்து சுற்றுலா சென்றுள்ளவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், அவர்கள் பயமின்றி சுற்றுலா சென்றுவிட்டுத் திரும்பவும் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு தமிழக முதல்வர், துணை முதல்வர் அறிவுரையின்பேரில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன்.
இதையடுத்து, ஜம்மு - காஷ்மீரில் 135 தமிழக சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பாக தங்க வைக்கவும், அவர்கள் பத்திரமாக ஊர் திரும்பவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அம்மாநிலத்தின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அமைச்சர் உடனடியாக தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டார். அவர்கள் தங்கும் நாள் வரை போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் விமான நிலையம் செல்வதாக இருந்தாலோ, ரயிலில் வருவதாக இருந்தாலோ தேவையான பாதுகாப்பு அளிக்குமாறும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, அங்கு தங்கியுள்ள தமிழக சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், அயனாவரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 135 பேர் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளதாக வேணுகோபால் எம்பி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திடீர் திருப்பம்! ஹார்ட் பீட் - 3 தொடரில் விஜய் சேதுபதி பட நாயகி!

விதியை மீறி பேரவைக்குள் செல்போன் கொண்டு வந்த அமைச்சர்! அதைப் பார்த்து படித்ததால் அதிர்ச்சி!

இன்றைய தமிழ்நாடு சட்டப்பேரவை 2026 காரசார விவாதம் - நேரலை! (ஆக. 10)

110 விதியின் கீழ் முதல்வரின் அறிவிப்பு யானைப்பசிக்கு சோளப்பொறியா? டிடிவி தினகரன் கேள்வி
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்! பேரவையில் முதல்வர் Vijay பேச்சு! | TN Assembly | TVK


