சத்தீஸ்கர் சட்டப் பேரவைக்கு நடைபெறவிருக்கும் தேர்தலில் முதல்வர் ரமண் சிங்குக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் பாஜகவின் மறைந்த மூத்த தலைவர் அடல் பிகாரி வாஜ்பாயின் மருமகன் கருணா சுக்லா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கர் சட்டப் பேரவைக்கு நவம்பர் மாதம் இருகட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் ராஜ்நந்த்கோன் சட்டப் பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் முதல்வர் ரமண் சிங் போட்டியிடுகிறார். இந்நிலையில், முதல் கட்டத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் 2ஆவது பட்டியலை காங்கிரஸ் கட்சி திங்கள்கிழமை வெளியிட்டது. இதில் ராஜ்நந்த்கோன் சட்டப் பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் பிரதமரும், பாஜவின் மறைந்த மூத்த தலைவருமான வாஜ்பாயின் மருமகன் கருணா சுக்லா அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜகவில் முன்பு இருந்த சுக்லா, அக்கட்சியில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு விலகினார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் அவர் சேர்ந்தார்.
காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்ட 2ஆவது கட்ட வேட்பாளர் பட்டியலில், 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்பு, 12 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் முதல்கட்டமாக வெளியிட்டிருந்தது.
சத்தீஸ்கர் சட்டப் பேரவைக்கு நவம்பர் மாதம் 12ஆம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய செவ்வாய்க்கிழமையே (அக். 23) கடைசி நாளாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக லட்சக்கணக்கானோா் கிரிவலம்! பேருந்து வசதியின்றி பக்தா்கள் தவிப்பு!!

திருப்பத்தூா்: அரசு ஊழியா்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவா்கள் 7,832 போ் தபால் வாக்கு செலுத்தியுள்ளனா்

மாநில மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பிரதமா் பேசுவது ஏற்புடையதல்ல: இரா.முத்தரசன்

நடமாடும் மருத்துவ கிளினிக் உள்பட தொழிலாளா்களுக்கான பல்வேறு நலத் திட்டங்கள்: முதல்வா் ரேகா குப்தா அறிவிப்பு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

