
இன்று ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தல்: வேட்பாளர்களிடையே காரசார விவாதம்
தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) மாணவர் சங்கத் தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) மாணவர் சங்கத் தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
நாட்டு நடப்புகளின் அடிப்படையில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மாணவர் சங்கப் பிரதிநிதிகள் நிகழ்த்தும் விவாதமும், தேர்தல் முடிவும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபளிக்கும் என்பதால், இந்த நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் உன்னிப்பாக கவனிப்பதுண்டு.
அமெரிக்க அதிபர் தேர்தலில் நடைபெறும் வேட்பாளின் விவதாக நிகழ்ச்சியைப்போல், ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் சார்புடைய மாணவர் சங்கப் பிரதிநிதிகளின் விவாதமும், அதைத் தொடர்ந்து கேள்விகள் கேட்டும் நிகழ்ச்சி புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதில் இடதுசாரி முன்னணியின் சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் என். சாய் பாலாஜி பேசுகையில், "அப்பாவி மக்களை கும்பல் கொலையால் கொல்லப்படுகிறார்கள். அவர்களைக் கொன்றவர்கள் தப்பிச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கு மத்திய அரசு, ஆர்எஸ்எஸ், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் பின்பலம் இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். நாட்டையே கும்பல் கொலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியில் முடிந்துள்ளது. வாக்குறுதி அளித்தப்படி வேலைவாய்ப்புகள் அளிக்கப்படவில்லை. உயர்கல்வி நிலையங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது.
இங்கு பல்கலைக்கழகத்தை துணை வேந்தர் சீரழிக்கிறார். மாணவர்கள் அதைத் தடுக்கிறார்கள்' என்றார்.
வலது சாரி அமைப்புகளின் ஆதரவு பெற்ற ஏபிவிபி அமைப்பின் வேட்பாளர் லலித் பாண்டே பேசுகையில், "தில்லி பல்கலைக்கழக வளாகத்தில் தேசத்துக்கு எதிரானவர்கள் உள்ளனர். நாங்கள் பதவிக்கு வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் (என்எஸ்யுஐ) வேட்பாளர் விகாஸ் யாதவ் பேசுகையில், "உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைகான இடங்களை மத்திய அரசு குறைத்துள்ளது.
இடஒதுக்கீடு திட்டத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. ஜேஎன்யு பல்கலைக்கழகத்திலும் மாணவர் சேர்க்கைகான இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன' என்றார்.
பிர்ஸா அம்பேத்கர் புலே மாணவர் சங்கத்தின் வேட்பாளர் தலபெலி பிரவீன் பேசுகையில், "எங்கள் அமைப்புக்கு வாக்களித்தால் ஏபிவிபியினருக்கு சாதகமாக அமைந்துவிடும் என்று இடதுசாரி மாணவர் அமைப்பினர் கூறுவது தவறு.
இடது, வலது அரசியலில் மாட்டிக் கொள்ளாதீர்கள். ஒடுக்கப்பட்டவர்களுக்காக பணியாற்றுங்கள்' என்றார்.
இந்த விவாதத்தில் பார்வையற்றவர்களும் தங்கள் கேள்விகளை எழுப்பும் வகையிலும், தேர்தலில் வாக்களிப்பதிலும் பிரைலி முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற தங்களின் கோரிக்கை தொடர்ந்து நிராகரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பார்வையற்றோர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் விவாத மேடை அருகே மனித சங்கிலி போராட்டம் நடத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தத் தேர்தலில் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் மாணவர் அமைப்பு முதல் முறையாக தனது வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





