ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

மம்தா கட்சிக்கு எதிராக இடதுசாரிகள், காங்கிரஸ் போர்க்கொடி

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற நிதி நிறுவன மோசடி தொடர்பாக, முதல்வர் மம்தா பானர்ஜி

Updated On :14 பிப்ரவரி 2019, 1:14 am IST

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற நிதி நிறுவன மோசடி தொடர்பாக, முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி மீது  இடதுசாரி மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவையில் புதன்கிழமை குற்றம்சாட்டினர்.
நிதி நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த பொதுமக்களின் பணத்தை திரிணமூல் காங்கிரஸ் கட்சி கொள்ளையடித்து விட்டதாகவும் அவர்கள் கூறினர். முறைப்படுத்தப்படாத முதலீட்டுத் திட்டங்களை தடை செய்யும் மசோதா மக்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.  முன்னதாக, அந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து,  திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள், அவையின் மையப் பகுதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் அந்த மசோதா குறித்த விவாதம் தொடங்கியது.
காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் செளத்ரி பேசுகையில், லட்சக்கணக்கான மக்களின் பணத்தை திரிணமூல் காங்கிரஸ் கட்சி கொள்ளையடித்துவிட்டதாகவும், அந்தப் பணத்தை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அடுத்ததாகப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. முஹம்மது சலீம், திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் சிலரை பட்டியலிட்டு, அவர்களை ஊழல் குற்றச்சாட்டின் கீழ் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதே சமயம், காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகளின் கருத்தை வரவேற்று பாஜக எம்.பி.க்கள் மேஜைகளைத் தட்டினர். ஆனால், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது, நிதியமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில், பார்வையாளர் மாடத்தில் இருந்து அவை நடவடிக்கைகளை கவனிக்கும் பள்ளிக் குழந்தைகள் இந்த அமளி மூலமாக என்ன செய்தியை உணருவார்கள் என்று அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.