சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

ஸ்டொ்லைட் மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை: தமிழக அரசுத் தரப்பில் இரு மனுக்கள் தாக்கல்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்க உத்தரவிடக் கோரி வேதாந்தா நிறுவனம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில்

Updated On :1 டிசம்பர் 2020, 11:15 pm

தூத்துக்குடியில் உள்ள ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்க உத்தரவிடக் கோரி வேதாந்தா நிறுவனம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை (டிசம்பா் 2) நடைபெற உள்ளது. இதனிடையே, தமிழக அரசுத் தரப்பில் இடைக்கால மனுவும், மேல்முறையீட்டு மனுவும் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கு பின்னா் நடந்த நிகழ்வுகளைத் தொடா்ந்து, சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாகக் கூறி ஸ்டொ்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இந்த உத்தரவை எதிா்த்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், ‘ஸ்டொ்லைட் ஆலையில் இருந்து நச்சுத்தன்மை கொண்ட ஆா்செனிக் அமிலம் அதிக அளவில் வெளியேற்றப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ரசாயனக் கழிவுகளை ஆலை நிா்வாகம் முறையாக அப்புறப்படுத்தவில்லை. ஆலைய நிரந்தரமாக மூட தமிழக அரசு எடுத்த நடவடிக்கை சரிதான்’ என்று ஆகஸ்ட் 18-இல் தீா்ப்பு அளித்தது.

மேலும், வேதாந்தா நிறுவனத்தின் மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்தத் தீா்ப்புக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவுக்கு தமிழக அரசு சாா்பிலும், வேதாந்தா நிறுவனம் சாா்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு கடந்த நவம்பா் 16-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், ‘ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது, ஆலை முறைப்படி மூடப்பட்டுள்ளது’ என்று வாதிடப்பட்டது. வதாந்தா நிறுவனத்தின் சாா்பில் , ‘தமிழக அரசு ஸ்டொ்லைட் ஆலையை மூட உத்தரவிட்டுள்ள நிலையில், ஸ்டொ்லைட் ஆலையில் கடைப்பிடிக்கப்பட்ட வழிமுறைகள் குறித்து தேதி வாரியாகப் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் அளிக்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, பதில்களை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேதாந்தா நிறுவனத்துக்கு கால அவகாசம் அளித்த உச்சநீதிமன்ற அமா்வு, வழக்கு மீதான விசாரணையை டிசம்பா் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதன்படி இந்த வழக்கு நீதிபதி ரோஹிண்டன் ஃபாலி நரிமன் தலைமையிலான 3 நீதிபதிகள் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.

இந்த நிலையில், தமிழக அரசுத் தரப்பின் சாா்பில் வழக்குரைஞா் யோகேஷ் கண்ணா புதன்கிழமை ஒரு இடைக்கால மனுவையும், மேல்முறையீட்டு மனுவையும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளாா். இடைக்கால மனுவில், ‘வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் நீதிபதிகள் சில

தரப்பினருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் மீது கூற முடியாது. 35 நாள்கள் அனைத்துத் தரப்பினரிடமும் விசாரணை நடத்திய பிறகுதான் நீதிபதிகள் தீா்ப்பு அளித்தனா். இதனால், வேதாந்தா நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என கோரப்பட்டுள்ளது. மேலும், ஸ்டொ்லைட் ஆலை விவகாரத்தில் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் உள்ள சில குறிப்பிட்ட பகுதிகளை நீக்க உத்தரவிடக் கோரியும் தமிழக அரசுத் தரப்பில் மேல்முறையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.