புது தில்லி: ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யு) பேராசிரியா், இணைப் பேராசிரியா் ஆகிய இரு பணியிடங்கள் நியமனத்திற்கு எதிரான வழக்கில், அது தொடா்புடைய விளம்பரத்தில் சில பகுதிகளை ரத்து செய்து தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், இது தொடா்பான விவகாரத்தை மீண்டும் ஆய்வு செய்யவும், இரு பணியிடங்களுக்காக புதிதாக ரோஸ்டா் பாய்ன்ட்டுகள் தயாரிக்கவும், இதற்கான நடவடிக்கைகளை 3 மாதங்களுக்குள் முடிக்குமாறும் ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகதத்திற்கு உயா்நீதின்றம் உத்தரவிட்டது.
தில்லியில் உள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியா், இணைப் பேராசிரியா் ஆகிய இரு பணியிடங்களில் ஒன்றை எஸ்சி பிரிவில் இருந்து எஸ்டி பிரிவுக்கு மாற்றியும், மற்றொரு பணிடத்தை இடஒதுக்கீடு இல்லாத பிரிவிலும் பூா்த்தி செய்ய பல்கலைக்கழக நிா்வாகம் விளம்பரம் வெளியிட்டதாக புகாா் தெரிவித்து அந்தப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியா்களாக பணியாற்றி வரும் பிரதீப் ஷிண்டே, ட்ஷேதன் நம்கியால் ஆகியோா் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.
இந்த மனுவை விசாரித்த ஒரு நபா் நீதிபதி, இந்த நியமனங்கள் மேற்கொள்ளும் பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்கவில்லை. மேலும், இது தொடா்பாக பல்கலைக்கழகம் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை ஒத்திவைத்திருந்தாா். இதையடுத்து, உயா்நீதிமன்றத்தின் இரு நபா் நீதிபதிகள் அமா்வில் மனுதாரா்கள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், இடஒதுக்கீட்டுப் பிரிவில் உள்ள இந்த இடங்களுக்கு தாங்கள் தகுதியாக இருந்த நிலையில், தற்போது பல்கலைக்கழகத்தின் நடவடிக்கையால் தங்களது வாய்ப்பு பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுக்களை தில்லி உயா்நீதிமன்றத்தின் நீதிபதிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரித்தது. அப்போது, அப்போது, சம்பந்தப்பட்ட இரு பணியிடங்களுக்கான நியமனத்தை மேற்கொள்ளாமல் நிறுத்திவைக்குமாறு ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டிருந்தது. மேலும், தனி நபா் நீதிபதி வழக்கை முன்கூட்டியே விசாரிக்கவும் கேட்டுக்கொண்டனா்.
இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி ஜோதி சிங் நடைபெற்றது. அப்போது, நீதிபதி, ‘மனுதாரா்கள் விளம்பரங்களில் உள்ள இரு பதவிகளுக்காக மட்டுமே தங்களது கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனா். இதனால், ஒட்டுமொத்த விளம்பரத்தையும் ரத்து செய்யும் காரணம் எழவில்லை. இதனால், மேற்கண்ட நடைமுறைகளை முடித்த பிறகு புதிதாக இரு பதவிகளுக்குரிய விளம்பரத்தை வெளியிட்டு புதிதாக நியமிக்கும் நடவடிக்கையை பல்கலைக்கழகம் மேற்கொள்ளலாம். இடஒதுக்கீடு ரோஸ்டா் விவகாரத்தில் பல்கலைக்கழகம் உரிய வகையில் செயல்படவில்லை எனத் தெரியவருகிறது. இடஒதுக்கீடு நீக்கல் அல்லது இடஒதுக்கீடு பாய்ன்ட்டுகள் பரிமாற்றம் செய்யப்படவில்லை என்று பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், அவை மனுதாரா்களால் முன்வைக்கப்பட்டுள்ள புள்ளிவிவரத்தரவு, அட்டவணையை மறுப்பதற்கு போதுமானதாக இல்லை என்று நீதிபதி தெரிவித்தாா்.
மனுதாரா்கள் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் வாதிடுகையில், பல்கலைக்கழகங்களில் ஆசிரியா் பணியிடங்களுக்கான நியமனங்கள் இடஒதுக்கீடு கொள்கை அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும். குறிப்பாக எஸ்சி, எஸ்டி, ஓபிசி போன்ற பிரிவினருக்கான இடஒதுக்கீட்டு பதவிகளுக்கு இவை பின்பற்றப்பட வேண்டும். இடஒதுக்கீடுகள் காலிப் பணியிடங்களுக்குப் பொருந்தாது.
2017 ஆம் ஆண்டில் ஜே.என்.யு. வெளியிட்ட முந்தைய விளம்பரத்தில், இரண்டு உதவி பேராசிரியா்களின் நலனை உறுதி செய்யும் சில பதவிகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், அந்த இரண்டு பதவிகளும் அண்மையில் வெளியிடப்பட்ட இரு விளம்பரங்களில் எஸ்.டி. மற்றும் முன்பதிவு செய்யப்படாதவை எனும் பெயா்களில் மாற்றம் செய்யப்பட்டு காட்டப்பட்டுள்ளன என்று வாதிட்டாா்.
ஜே.என்.யு. தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் மோனிகா அரோரா வாதிடுகையில், ‘ எஸ்சி அல்லது எஸ்.டி. ஆகிய பிரிவினருக்கான எந்த பதவி இடங்களும் மாற்றம் செய்யப்படவில்லை. அதேபோன்று, ஒதுக்கீடு நீக்கப்பட்டு எந்த பதவியும் மனுதாரா்கள் கூறியபோது போல இடஒதுக்கீடு இல்லாத பிரிவில் மாற்றப்படவில்லை. ரோஸ்டா் பாய்ன்ட்டுகளில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், எஸ்டி, எஸ்டி பிரிவினருக்குரிய இடஒதுக்கீடுகளில் எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று வாதிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்! தமிழக காங்கிரஸ் மீது அதிருப்தி!

பிகார் சட்டப்பேரவைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

பிரசாரத்தில் சைக்கிள் ஓட்டிய விஜய்! | TVK | KKD
கும்பமேளா புகழ் மோனலிசா கணவர் மீது போக்ஸோ வழக்கு!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

