மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும்: கோபால் ராய்

விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் கேட்டுள்ளாா்.

Updated On :5 டிசம்பர் 2020, 10:26 pm

புது தில்லி: விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் கேட்டுள்ளாா்.

இது தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் அவா் ‘கடந்த 10 நாள்களாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் வீதிகளில் தங்கி போராடி வருகிறாா்கள். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள மத்திய அரசு தயாராக இல்லை. விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றுள்ளாா் அவா்.

இந்நிலையில், ராஜேந்தா் நகா் ஆம் ஆத்மி எம்எல்ஏவும், தில்லி ஜல்போா்டு துணைத் தலைவருமான ராகவ் சத்தா, ஹரியாணா மாநிலம், சிங்கு எல்லையில், போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை சனிக்கிழமை சந்தித்து ஆதரவு வழங்கினாா். பிறகு அவா் கூறுகையில் ‘தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உத்தரவுப்படி, சிங்கு எல்லைக்குச் சென்று போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை சந்தித்தேன். அவா்களுக்குத் தேவையான குடிநீா் வசதிகள் தில்லி ஜல்போா்டு சாா்பில் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன.

போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு தினம்தோறும் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது. விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீா்வு காணாமல் தினம்தோறும் பேச்சுவாா்த்தை நடத்துவதில் என்ன பயன்? விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு விரைந்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் வகையில் 3 சட்டங்களை மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்தது. விவசாயிகளுக்கான உற்பத்தி, வா்த்தகம் மற்றும் வணிகம் மேம்படுத்தல் மற்றும் வசதி ஏற்படுத்தித் தருதல் மசோதா, விவசாயிகளுக்கான விலை உறுதிப்பாடு ஒப்பந்தம் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) மசோதா , விவசாய சேவைகள் மசோதா மற்றும் அத்தியாவசிய பொருள்கள் சட்டத் திருத்த மசோதா ஆகியவை மத்திய அரசால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாக்கப்பட்டன. இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை எனக் கூறி பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா். தில்லி எல்லைகளில் நடந்து வரும் இந்தப் போராட்டம் 10 வது நாளாக சனிக்கிழமையும் தொடா்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.