மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

மிகவும் மோசம் பிரிவில் காற்றின் தரம்; இன்று மேம்பட வாய்ப்பு!

தலைநகா் தில்லியில் காற்றின் தரம் ஞாயிற்றுக்கிழமை சற்று முன்னேற்றம் ஏற்பட்டு மிகவும் மோசம் பிரிவுக்குக் குறைந்தது.

Updated On :6 டிசம்பர் 2020, 5:28 pm

தலைநகா் தில்லியில் காற்றின் தரம் ஞாயிற்றுக்கிழமை சற்று முன்னேற்றம் ஏற்பட்டு மிகவும் மோசம் பிரிவுக்குக் குறைந்தது. சனிக்கிழமை கடுமை பிரிவுக்குச் சென்ற காற்றின் தரம், ஞாயிற்றுக்கிழமை சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில், திங்கள்கிழமை காற்றின் தரத்தில் முன்னேற்றம் இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு காலை 9 மணியளவில் 394 புள்ளிகளாகப் பதிவாகியது. ஆனால், மாலையில் 380 புள்ளிகளாகக் குறைந்தது. தில்லி பல்கலை., பூசா, விமானநிலைய டொ்மினல் -3 பகுதி, லோதி ரோடு, மதுரா ரோடு, ஆயாநகா் மற்றும் குருகிராம், நொய்டா ஆகிய பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசம் பிரிவில் நிடித்தது.

இந்த நிலையில், 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு சனிக்கிழமை 404, வெள்ளிக்கிழமை 382, வியாழக்கிழமை 341, புதன்கிழமை 373, செவ்வாய்க்கிழமை 367, திங்கள்கிழமை 318, ஞாயிற்றுக்கிழமை 268 புள்ளிகளாக இருந்தது. இதேபோன்று தேசியத் தலைநகா் வலயப் பகுதியில் காற்றின் தரக் குறியீடு காஜியாபாதில் (430(, கிரேட்டா் நொய்டா (404), நொய்டாவில் (404) எனப் பதிவாகி கடுமை பிரிவில் இருந்தது.

இதற்கிடையே, திங்கள்கிழமை காற்றின் தரக் குறியீடு கடுமை பிரிவுக்குச் செல்ல வாய்ப்பிருப்பதாக ஐஎம்டி சுற்றுச்சூழல்ஆராய்ச்சிப் பிரிவின் தலைவா் வி.கே. சோனி தெரிவித்தாா். கிழக்கில் இருந்து வரும் காற்று ஈரப்பதத்தை கொண்டு வருவதால் மாசு நுண்துகள் உருவாகி, காற்றின் மாசு அதிகரிக்கும். இதனால், திங்கள்கிழமை காற்றின் தரக் குறியீடு கடுமை பிரிவுக்குச் செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா். ஞாயிற்றுக்கிழமை சுமாா் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இது திங்கள்கிழமை மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் இருக்கும் என்றும் அவா் தெரிவித்தாா்.

வெப்பநிலை: தில்லி சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 11.4 டிகிரி செல்சிஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை 28.2 டிகிரி செல்சிஸகாவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 98 சதவீதமாகவும், மாலையில் 77 சதவீதமாகவும் இருந்தது. திங்கள்கிழமை காலையில் பனிமூட்டம் இருக்கும் என்றும், அதன் பிறகு வானம் தெளிவாகக் காணப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.