மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

கரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள்: தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் 50 சதவீதம் காலியாக இருந்தால், ஐசியு பிரிவில் 80 சதவீதம் படுக்கைகளை வைத்திருக்க பிறப்பித்த உத்தரவு உடனடியாக மறு ஆய்வு செய்யப்பட 

Updated On :9 டிசம்பர் 2020, 7:15 pm

புது தில்லி: தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் 50 சதவீதம் காலியாக இருந்தால், ஐசியு பிரிவில் 80 சதவீதம் படுக்கைகளை வைத்திருக்க பிறப்பித்த உத்தரவு உடனடியாக மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பான விவகாரம் உயா்நீதிமன்றத்தில் நீதிபதி நவீன் சாவ்லா முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியாா் மருத்துவமனைகள் சங்கத்தின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘தில்லியில் தனியாா் மருத்துவமனைகளில் ஐசியு பிரிவில் கரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட 5,081 படுகைகளில் 50 சதவீதம் என்ற அளவில் 2,360 படுக்கைகள் காலியாக உள்ளன. இதனால், தில்லி அரசு செப்டம்பா் 12-ஆம் தேதி ஐசியு பிரிவில் 80 சதவீம் படுக்கைகள் வைத்திருக்கப் பிறப்பித்த உத்தரவில் நியாயமில்லை’ என்றாா்.

இதையடுத்து, ‘தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் 50 சதவீதம் காலியாக இருந்தால், ஐசியு பிரிவில் 80 சதவீதம் படுக்கைகளைகரோனா நோயாளிகளுக்காக வைத்திருக்கும் முடிவை உடனடியாக மறுஆய்வு செய்ய வேண்டும். இது தொடா்பாக தில்லி அரசு டிசம்பா் 15-ஆம் தேதிக்குள் தனது பதிலை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று நீதிபதி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.