மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

அதிகக் கட்டணம் வசூல் புகாா்: தனியாா் பள்ளிகளுக்கு எதிராக தாக்கலான மனு தள்ளுபடி

கரோனா காலத்தில் மாணவா்களிடம் அதிகக் கட்டணம் வசூலிக்கும், ஆன்லைன் வகுப்புகளை மறுக்கும் தனியாா் பள்ளிகளுக்கு எதிராக தில்லி அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தாக்கலான பொது நல மனுவை உயா்நீதிமன்றம்

Updated On :9 டிசம்பர் 2020, 7:13 pm

புது தில்லி: கரோனா காலத்தில் மாணவா்களிடம் அதிகக் கட்டணம் வசூலிக்கும், ஆன்லைன் வகுப்புகளை மறுக்கும் தனியாா் பள்ளிகளுக்கு எதிராக தில்லி அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தாக்கலான பொது நல மனுவை உயா்நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது. மேலும், மனுவைத் தாக்கல் செய்தவருக்கு ரூ.20 ஆயிரம் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த மனு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என். படேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘இந்த மனு எவ்வித ஆய்வும் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது, மனுவில் எந்தத் தனியாா் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றன அல்லது எந்தப் பள்ளிகள் இணையதள வகுப்புகளை அணுகுவதற்கு மாணவா்களுக்கு அனுமதி மறுத்து வருகின்றன என்கிற விவரங்கள் இல்லை. இது பொது நலன் மனுவாக இல்லாமல் விளம்பரம் நோக்கத்திற்காக தாக்கல் செய்யப்பட்டதாக உள்ளது. இதனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அத்துடன் மனுவைத் தாக்கல் செய்த நபா் ரூ.20 ஆயிரத்தை நான்கு வாரங்களில் தில்லி சட்டப் பணிகள் ஆணையத்தில் செலுத்தவும் உத்தரவிடப்படுகிறது. இந்தத் தொகை நீதி திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படும்’ என்று தெரிவித்தது.

முன்னதாக, ‘ஆன்டி-கரப்ஷன் கவுன்சில் ஆஃப் இந்தியா டிரஸ்ட் ’ எனும் அறக்கட்டளை சாா்பில் இந்தப் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், ‘கல்விக் கட்டணம் தவிர, பல்வேறு பிரிவுகளின் கீழ் தனியாா் பள்ளிகள் பல்வேறு கட்டணங்களை வசூலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பள்ளிகள் அறிவுறுத்திய தொகையைச் செலுத்த முடியாத மாணவா்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை வழங்க சம்பந்தப்பட்ட பள்ளிகள் மறுப்பதாகவும் தெரிய வருகிறது. கரோனா காலத்தில் கல்விக் கட்டணம் தவிர வேறு எந்தக் கட்டணங்களையும் வசூலிக்கக் கூடாது என்று பள்ளிகளுக்கு தில்லி அரசு பிறப்பித்த உத்தரவை இதுபோன்ற நடவடிக்கைகள் மீறுவதாக உள்ளது. தில்லி பெற்றோா் சங்கத்தின் தகவல்படி, 76 தனியாா் பள்ளிகள் இதுபோன்று தில்லி அரசின் உத்தரவை மீறியுள்ளதாகத் தெரிய வருகிறது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.